பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்த்த மதுரை

43


நாலடியார் தோன்றிய நலம்

இத்தகைய கடைச்சங்கத்திற்குப் பின்னர்ப் பன்னூறு ஆண்டுகளாக மதுரைமாங்கரில் தமிழ்ச்சங்கம் நிலவாதொழிந்தது. உக்கிரப்பெருவழுதியின் காலத்திற்குப் பின்னர் வந்த பாண்டிய மன்னர்கள் சங்கம் நிறுவித் தமிழை வளர்க்காது போயினர். ஐந்தாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் புகுந்த சமணரும் பெளத்தரும் தத்தம் சமயச் சார்புடைய சங்கங்களை மதுரை மாநகரில் தோற்றுவித்தனர். அவற்றின் வாயிலாகப் பல நூல்களே ஆக்கித் தமிழை வளர்த்தனர். ஏழாம் நூற்றாண்டில் மதுரைமாககரைச் சூழ்ந்து வாழ்ந்து வந்த எண்ணுயிரம் சமணர்கள் பாண்டியன் ஆதரவில் இருந்தனர். அவர்கள் அனைவரும் தமிழ்வல்ல புலவராய் விளங்கினர். அவர்கள் வடநாட்டிலிருந்து வற்கடம் காரணமாகத் தென்னடு புகுந்தவர். அவர்கள் தம் நாட்டில் மழைவளம் பொழிந்து செழித்ததும் மீண்டும் ஆங்குச் செல்லப் பாண்டியனிடம் விடை வேண்டினர்.

“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்”

என்பார் திருவள்ளுள் கற்றவராகிய சமணர்களைப் பிரிவதற்கு மன்னன் பெரிதும் வருந்தினான். அவனது துயரத்தைக் கண்ட சமணர்கள் அவன்பால் சொல்லிக் கொள்ளாமலே நள்ளிருளில் தம் நாடுநோக்கி நடந்தனர். அவர்கள். மதுரைமாநகரை விட்டுப் புறப்படுங்கால் தாம் தங்கிய இடத்தில் தனித்தனியே ஒரு காலடிப் பாடலை ஏட்டில் எழுதிவைத்து மறைந்தனர். மறுகாட் காலையில் செய்தியறிந்த மன்னன் அவர்கள் இருந்த இடத்தை நேரில் சென்று கண்டான். ஆங்கு ஒவ்வொரு