பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெல்லையின் அமைப்பும் சிறப்பும்

55

களுடன் அணிபெற அமைத்தான்; தன் தலைநகரமாகிய மதுரைமாநகர்த் திருக்கோயில் விழாக்களைப் போன்றே திங்கள்தோறும் திருவிழாக்கள் நிகழுமாறு: செய்தான். அதனாலயே திருஞானசம்பந்தர் தம் பதிகத்தில் ‘திங்கள்நாள். விழாமல்கு திருநெல்வேலி’ என்று குறித்தருளினர்.

சிந்துபூந்துறை

இந்நகர் பொன்திணிந்த புனல் பெருகும் பொருகை யெனும் திருநதியின் கரையில் கவினுற விளங்குகிறது. நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு நேராக விளங்கும் பொருநையாற்றுத் துறை சிந்துபூந்துறை என்று வழங்குகின்றது. அதுவே பழமையான நீர்த்துறை யாகும். அப் பகுதியில்தான் நெல்லமாநகரில் வாழும் மக்கள் சென்று நீராடி வருவர். இத்துறை, சோலைகள் நிறைந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஆதலின் மரங்களிலுள்ள மலரிலிருந்து தேன் துளித் துளியாக நீரில் சிநதிக்கொண்டிருக்கும் சிறப்புடையது. அதனாலயே சிந்துபூந்துறையென வழங்கலுற்றது. இப்பெயர் ஆதியில் பூந்துறையென்றே வழங்கியிருக்க வேண்டும். பொழில் சூழ்ந்து எழில் வாய்ந்த துறை யினைப் பூந்துறையெனப் போற்றியிருப்பர்.

சம்பந்தர் பாராட்டு

இத் துறையினை நெல்லைமாநகருக்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தர் கண்டார். இங்குள்ள சோலைகளில் மந்திகள் நிறைந்து காணப்பட்டன. அவைகள் ஒரு மரத்திலிருந்து மற்றாெரு மரத்திற்குத் தாவிக் குதித்து விளையாடிக்கொண்டிருந்தன. அவைகள் மரக்கிளைகளைப் பற்றிக்கொண்டு தாவுங் காலத்து அக் கிளைகளி