பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெல்லையின் அமைப்பும் சிறப்பும்

57


மாடவீதிகள் அமைந்துள்ளன. மாடம் என்பது கோவிலைக் குறிக்கும் சொல்லாகும். மாடத்தை அடுத் துள்ள வீதிகளாதலின் அவை மாட வீதியெனப் பட்டன. மாட வீதியைச் சுற்றித் தேரோடும் திரு வீதிகள் மிகவும் அகலமாக அமைந்துள்ளன. நகரின் மேற்கிலும் கிழக்கிலும் தேர் வீதிகளைச் சார்ந்து அணியணியாகத் தெருக்கள் பெருக்கமடைந்துள்ளன. வடக்கில் நயினர் குளம் நகரின் விரிவைத் தடை செய்தது. தெற்கில் பசும்பயிர் வயல்கள் நகரம் பரவத் தடையாயின.

பழமையான தெருக்கள்

இந் நகரின் நான்கு மாடவீதிகளிலும் நான்கு தேர் வீதிகளிலும் பலவகையான கடைகள் அமைக் துள்ளன. தேரோடும் வீதிகளைச் சார்ந்து, பலவகைப் பணியாளர்கள் வாழும் வீதிகள் பாங்குற அமைக் துள்ளன. அவற்றுள் சில இந்நகரின் பழம்பெருமையை உணர்த்தும் வரலாற்றுச் சிறப்புடையன. கீழைத் தேர் வீதியை அடுத்துக் கல்லத்தித்தெரு என்றாெரு தெரு உள்ளது. அது மதுரையிலுள்ள சிம்மக்கல் வீதியையும் யானைக்கல் வீதியையும் நினைவூட்டி நிற்பது. கின்றசீர் நெடுமாறனுகிய கூன்.பாண்டியன் இந் நகருக்கு வந்த நாளில் இப் பகுதியில் தங்கியிருக்க வேண்டும். அதனாலேயே இத்தெரு மதுரையிலுள்ள யானைக்கல் வீதியை நினைவூட்டுவதாக அமைந்திருக்கலாம்

காவற்புரை

கீழைத் தேர் வீதியையடுத்துக் காவற்புரைத்தெரு என்னும் சிறு தெரு அமைந்துள்ளது. காவற்புரை