பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தமிழ் வளர்த்த நகரங்கள்


என்பது சிறைச்சாலை. மதுரையிலிருந்து தென்னட்டை யாண்ட பாண்டியருக்கும் நாயக்க மன்னருக்கும் உரிய வரிகளைச் செலுத்தத் தவறினோர் இக் காவற் புரைகளில் அடைக்கப்பட்டனர். அத்தகைய காவற் புரைகள் பல அமைந்த தெரு, காவற்புரைத் தெரு என்று இன்றும் வழங்கிக்கொண்டிருக்கிறது. இன்று அத் தெருவில் காவற்புரைகள் இல்லை.

கூலக்கடை

மேலேத் தேர்வீதியை யடுத்துக் கூழைக் கடைத் தெரு என்று ஒரு சிறு தெரு அமைந்துள்ளது. இது குறுகிய தெருவாய் இருப்பதால் கூழைக் கடைத் தெரு என்று கூறப்பெற்றதென மக்கள் கருதுவர். ஆனால் அத் தெருவின் பழம்பெயர் கூலக் கடைத்தெரு என்பதாகும். கூலம் என்பது தானியம். உணவுத் தானியங் களே விற்கும் கடை கூலக்கடை யெனப்படும். கூலம் குவித்த கூல வீதி மதுரைமாககளில் இருந்ததைச் சிலப் பதிகாரம் குறிப்பிடும். மணிமேகலை ஆசிரியராகிய சித்தலைச் சாத்தனர் கூலவாணிகம் நடாத்திய பெரு வணிகர். திருநெல்வேலியில் பண்டை நாளில் கூலக் கடைகள் கிறைந்த வீதியாக இத்தெரு இருந்தது. அது இன்று பொன்வாணிகம் நடைபெறும் காசுக்கடைத் தெருவாகத் தேசுபெற்றுத் திகழ்கிறது.

அக்கசாலை

வடக்குத் தேர்வீதியை யடுத்து அக்கசாலை விநாயகர் தெரு அழைத்துள்ளது. அத்தெருவில் பொற் கொல்லர் என்னும் ப்னித்தட்டார்கள் வாழ்கின்றனர். அக்கசாலை யென்பது நாணயங்களை அடிக்கும் இட மாகும். பாண்டிகாட்டு அக்கசாலை, பழைய துறைமுக