பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தமிழ் வளர்த்த நகரங்கள்


மாகும். அவன் தாங்கியுள்ள கரும்பு வில்லும் அரும்பு மலரும் எறும்பும் சுரும்பும் மொய்த்தற்கு இடமாக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் விளங்குவது வியப்பை யளிப்பதாகும். அடுத்து, இன்னொரு தானில் இரதி தேவி இனிய காட்சி தருகிறாள். அவள் அழகுத் தேவனாகிய மன்மதனயே மணாளனாகப் பெற்ற பெருமிதத்துடன் நடை பயிலுவதுபோலச், சிற்பி அவளது வடிவை அழகாகச் சமைத்துள்ளான். அவள் அணிந்துள்ள முத்தாரமும் பட்டாடையும் காற்றில் பறந்து அசைவனபோலக் காட்டியிருக்கும் சிற்பியின் விற்பனத்தை என்னென்பது! சுவாமி கோயில் கொடி மரத்தின் முன்பமைந்த தோரண மண்டபத் தூண்களில் காணப்படும் வீரபத்திரர் சிற்பங்கள் வீரத் திருக் கோலத்துடன் விளங்குகின்றன. அம் மண்டபத்தின் அமைப்பும் நுண்ணிய வேலைப்பாடுகளை யுடையது.

சோமவார மண்டபம்

நந்தி மண்டபத்தின் வடபால் அமைந்த சோம வார மண்டபம் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. மரத்தில் செய்யத்தக்க நுண்ணிய வேலைப்பாடு களையெல்லாம் இம் மண்டபம் அமைத்த சிற்பி, கல்லில் அமைத்துக் காட்டியுள்ளான். இம் மண்டபத்தின் முன்னல் இருபெருந் துண்களில் எதிரெதிராக அருச்சு னனும் பவளக்கொடியும் காணப்படுகின்றனர். அருச்சுனன், மதுரையாசியாகிய அல்வியை மணந்த மணக் கோலத்துடன் அவள் தோள்களில் கையைப் போட்டுக் கொண்டு கம்பீரமாக நிற்பதும், எதிரேயுள்ள தூணில் பவளக்கொடி பாங்கியர் புடைசூழநின்று காணத்துடன் கடைக்கண்ணுல் நாயகன நோக்குவதும் ஆகா! அந்தச் சிற்பி எவ்வளவு அற்புதமாக அமைத்துள்ளான் !