பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தமிழ் வளர்த்த நகரங்கள்


“வேயின்ற முத்தர்தமை வெட்டினா னே இடையன் தாயீன்ற மேனி தயங்கவே”

என்று உளமிரங்கிப் பாடினார். அதனைக் கேட்ட குருடராகிய புலவரோ ஆத்திரத்துடன்,

“-பேயா, கேள் !
“எத்தனேகா ளென்றே இடறுவான் பாற்குடத்தை
அத்தனையும் வேண்டும் அவர்க்கு”

என்று பாடி முடித்தார். இடையனது பாற்குடத்தைப் பல நாளாகப் பாழாக்கிய அவ் வேய்முத்தருக்கு இதுவும் வேண்டும்; இன்னும் வேண்டும்!’ என்று சொல்லி நகையாடினர் அக் குருட்டுப் புலவர்.

கங்காளநாதர் காட்சி

சுவாமி கோவில் முதல் உள்சுற்று வெளியின் மேல்பால் கங்காளநாதரின் கவின்மிகு செப்புச் சிற்பம் காணப்படும். அவர் பக்கமாகத் தாருகவன முனிவர் பத்தினியர் கிலேயழிந்து தலைதடுமாறிக் காம பரவசராய் நிற்கும் காட்சி மிகவும் அழகு வாய்ந்ததாகும். நெல்லையில் நிகழும் ஆனிப் பெருந்திருவிழாவில் எட்டாம் திருநாளன்று தங்கச் சப்பரத்தில் தனியழகுடன் எழுந்தருளும் கங்காளநாதர் பிச்சாடனத் திருக்கோலம் காண்பார் கண்களைவிட்டு என்றும் அகலாதிருப்பதாகும்.

நெல்லைக் கோவிந்தர்

நெல்லையப்பர் கருவறையைச் சார்ந்து வடபால் பள்ளிகொண்ட பரந்தாமனது கற்சிலையொன்று மிகப் பெரியதாக அமைந்துள்ளது. அவ்விடத்தை நெல்லைக் கோவிந்தர் சங்கிதி என்பர். தமிழ்நாட்டின் பழஞ் சமயங்கள் சைவம், வைணவம் என்ற இரண்டுமாகும்.