பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தமிழ் வளர்த்த நகரங்கள்


பெருமாள்மீது நாள்தோறும் பாமாலை புனைந்து கனிக் துருகி முறையிட்டு வந்தார். அவர் சிறையிலிருக்கும் போது பெருமாள் மீது பாடிய பாக்களின் தொகுப்பே ‘குழைக்காதர் பாமாலை’ என்று பெயர்பெற்றது.

தீட்சதர் விடுதலை

தீட்சதர் நாள்தோறும் சிறைக்கூடத்தில் தமிழ்ப் பாடல் பாடிப் புலம்பிக்கொண்டிருப்பதை ஒரு நாள் சிறைக்கூடக் காவல் அதிகாரி கண்டார். அவர் சிறிது தமிழறிவுடையவர். அதனால் தீட்சதர் ஒரு தமிழ்ப் புலவரெனத் தெரிந்து, ஆட்சித் தலைவராகிய பிள்ளையனிடம் செய்தியைத் தெரிவித்தார். உடனே பிள்ளையன் குதிரைமீதேறிச் சிறைக்கூடத்தை அடைந்தார். நற் றமிழ்ப் புலவராகிய நாராயண தீட்சதரைக் கண்டார். அவர் குழைக்காதரை நினைந்துருகித் தமிழ்ப் பாடல் பாடிக்கொண்டிருக்கும் நிலையினைக் கண்டு உள்ளங் கரைந்தார். அவரையும் உடனிருந்த வைணவர்களேயும் விடுதலை செய்தார். அவர்களைத் தம் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்தார். அவர்கள் கொடுக்க வேண்டிய வரியை நீக்கியதுடன் புலவராகிய தீட்சதருடைய நிலங்களை என்றும் வரியில்லாத நிலங்களாகச் செய்துவிட்டார்.

வெள்ளியம்பலவாணரும் சிவப்பிரகாசரும்

நெல்லயைச் சார்ந்த சிந்துபூந்துறைத் திருமடத்தில் வெள்ளியம்பல வாணர் என்னும் தெள்ளிய தமிழ் முனிவர் ஒருவர் தங்கியிருந்தார். இவர் தருமை யாதீனத்தைச் சேர்ந்த தம்பிரான்களுள் ஒருவர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் வல்லவர். இவருடைய இலக்கண அறிவைக் கேள்வியுற்ற, காஞ்சிமாநகரைச்