பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தமிழ் வளர்ந்த கதை

வேலின் வெம்மையும் கோலின் செம்மையும்
சாலப் புகழ்ந்து போற்றிய நூலாம்
பட்டினப் பாலை பாடிய புலவர்க்கு
மட்டில் பெரும்புகழ்க் கரிகால் வளவன்
பதினாறு நூறா யிரம்பொன் பரிசில்
இதமுறக் கொடுத்தான் இன்றமிழ் வளரப்
பத்துப் பாடலால் புகழ்ந்த பரணர்க்குச்
சித்தம் மகிழ்ந்து சேரன் குட்டுவன்
கொடுத்த பரிசினைக் கூறுவன் கேட்பீர் !
படுத்த கிழவனும் பாய்ந்தெழுந் திடுவான் !
குன்றின் மேலே ஏறி நின்றான்
கண்டஊர் முழுதும் கவிஞர்க் களித்தான்
செல்வப் புதல்வன் குட்டுவன் சேரலையும்
நல்கி மகிழ்ந்தான் நாட்டவர் அறிய
அதியமான் அவ்வைக் களித்த நெல்லி
மதுரக் கனியின் மாண்பினைத் தெரிவீா்
அவ்வை யுண்ட அமுதக் கனியால்
இவ்வை யகத்தில் பல்லாண் டிருந்து
தமிழினை வளர்த்த தன்மையைத் தெரிவீா்
பொன்னும் மணியும் புவியும் நிதியும்
பன்னுாறு யானையும் பாடிய புலவர்க்குத்
தந்தால் தமிழும் தழைக்கா தொழியுமோ !
இந்த நாளினில் செந்தமிழ்ப் புலவரைப்
போற்றிக் காக்கும் புரவலர் இல்லை
ஆற்றல் நிறைந்த புலவரும் அருமை !

வசனம்

இவ்விதமாகப் பல வள்ளல்களும் மன்னர்களும் புலவர்களை ஆதரித்துப் போற்றியமையாலே, கவலையற்று