பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தமிழ் வளர்ந்த கதை


ததும்பி, எங்கும் பூசணமாய் வழிந்து கொண்டிருக்கும் போது அப்படிச் செய்வார்களா? காதுகளை மாத்திரம் அல்ல, வாயையும்கூட ஆ ! என்று திறந்த வண்ணமிருத்து கேட்டு மகிழ்கிறாா்கள் ! அவர்களுக்குத் தமிழ்ப்பற்று ஏற்பட்டு விட்டால், நம் ஐயாமார்களுக்கு மெய்யாகவே தமிழ்ப் பற்றுப் பெருகிவிடும் அல்லவா !

பாட்டு

அந்தாதி கோதை அரிய பிரபந்தம்
சிந்தை கவர்ந்திடும் சிறுநூல் வகைகள்
தொன்னுாற் றாறு விதமாய்த் தோன்றி
பண்ணும் இலக்கணப் பண்போ டனமந்து
வளர்ந்து செழித்தான் மக்கள் களிக்க,
தளர்ந்தவர் உளத்தைத் தட்டி யெழுப்பினாள்
கோவை இன்பம் கொண்டு குளிர்ந்தாள்
மேவும் பரணியால் வீரம் பேசினாள்
பிள்ளைக் கவியால் உள்ளம் கவர்ந்தாள்
தெள்ளிய தூது தெரிந்து கூறினாள்
வள்ளைப் பாட்டால் உள்ளம் குதித்தாள்
பள்ளு உலாவால் துள்ளி யாடினாள்
குறவர் மொழியால் குரவை பாடினாள்
ஏற்றப் பாட்டால் ஏற்றம் அடைந்தாள்
தெம்மாங்குப் பாட்டால் உள்ளம் திளைத்தாள்
சிந்துப் பாட்டால் சிந்தை உவந்தாள்
உவமை உருவகம் முதலாம் உயர்சுவை
அணிகள் பலவும் அணிந்து வளர்ந்தாள்

வசனம்

முந்நுாறு ஆண்டுகளுக்குமுன்னாலே நெல்லை நாட்டிலே, சீனைகுண்டம் என்னும் ஊரிலே, வேளாளர் குலத்திலே