பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்ந்த கதை

25


சித்தம் கனிந்த சுத்தா னந்தரின்
புத்தம் புதிய வித்தகப் பாக்கள்
பாவுக் கினிய பாரதி தாசனின்
நாவுக் கினிக்கும் நற்றமிழ்க் கவிதை !—ஆகா!

இசை வேறு

இனிமைத் தமிழ்மொழி எமதுஎமக்கு
இன்பம் தரும்படி வாய்த்தநல் லமுது
கனியைப் பிழிந்திட்ட சாறுஎங்கள்
கதியில் உயர்த்திட யாம்பெற்ற பேறு
தனிமைச் சுவையுள்ள சொல்லை—எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாம்கண்ட தில்லை
கனியுண்டு நனியுண்டு காதல்—தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ்மீதில்—என்று

இசை வேறு

துள்ளிக் குடுத்திடும் தெள்ளமுதப் பாக்கள்
பாண்டித் துரையின் பைந்தமிழ்த் தொண்டு
சேது பதிகளின் செந்தமிழ்ப் பணிகள்
மாம்பழக் கவியின் மதுரப் பாடல்கள்
சைவசித் தாந்தக் கழக நற்பணி
மதுரை வள்ளுவர் கழகம் செய்பணி
திருச்சி நற்சபை ஆற்று பொற்பணி
திருமந் திரிநகர்ச் சித்தாந்த சபை
தென்காசி வள்ளுவர் கழகம் செய்பணி
நெல்லை அருண கிரிமன்ற நீள்பணி
இன்னும் பற்பல சங்கத் தின்பணி
செந்தமிழ்ச் செல்வி சந்தத் தமிழ்ப்பொழில்
செந்தமிழ் போதினி கலைமகள் முதலாம்