பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) த மி ழ் வி யா சங் கள் - 503




(11) அறு+வ்+ஐ: அறுவை=துகில் அல்லது வஸ்திரம். நீள மாக ஒரே'கிர்ைபாய்,நெய்ததனே இடையிடையே யறுத்துத் தனித்தனி வஸ் திரமாக்குதலின்துகிலே யுணர்த்துவதாயிற்று. அறுக்கப்பட்டது அறுவ்ை' ஈண்டு ஐ செயப்படு பொருண்மை விகுதி. முன்கா லத்தில், இக்காலத் திலும் பல விடங்களில், சாலியர் தறியின்கண் ஆடைசெய்கையில் ஒரேநிாை - யாய்ளே செய்துகொண்டே போவார்கள். அவ்வாறே முழுதும் கெய்த பின்னர் அறுத்தற்கென இடம் விட்டிருந்தஇடங்களில் அறுத்துத் தனித்தனி யுடை யாக்கு வார்கள்.இவ்வழக்கத்தை யதுசரித்தே நம்தமிழ்மொழியின் கண்ணே. பிற சொற்களும் பிறந்திருக்கின்றன. உதாரணமாகத் துணி, துண்டுக் 'கூறை முதலியசொற்களின் பொருட்காரணத்தையு முய்த்துணர்க. துணி, கப்படுதலிற் றுணியும், துண்டிக்கப்படுதலிற்றுண்டும் கூறுபடுத்தப்படுதலிற் கூறையுமாயின.




(12) அறு+ஐ: அறை=இஃது உள், மலை முழைஞ்சு, குறை, திரை: பாத்தி, பாறை முதலிய பலபொருள் பயப்பதோர் சொல். நான்கு பக்கங்க ளிலும் மதிலெழுப்பி ஏனைய விடங்களினின்றும் அறுக்கப்படுதலின் உள் ளாம்; மலையின்கண் அறுத்துக் குடைந்து குகை செய்யப்படுதலின் முழைஞ் சாம்; அற்றது.குறைந்ததாமாதலிற் குறையாம்; கடலின் நீர்ப்பரப்பினின்றும் அற்று எழுந்து மறிந்து வீழ்தலில் திரையாம்; கிலத்தின்கட் கரைகோலப்ப ட்டு மற்றையவற்றினின்றும் அறுபட்டு கிற்றலிற் பாத்தியாம்; நிலப்பரப்பினே யறுத்துக்கொண்டுமேலெழும்பித் துறுத்து கிற்றலிற் பாறையாம்.




(18) அறு+அம்: அற்று+அம்: அற்றம்=அச்சம், அழிவு, உண் மை, சமயம், சோர்வு, மறைவு, மெலிவு, வறுமை முதலிய பல பொருள் பயப்பது. தைரியமறுதலின் அச்சமும், வாழ்வறுதலின் அழிவும், தன்னெ மிெடைந்த பொய் முதலியவற்றினின்றும் அறுதலின் உண்மையும், பொ ருண்முதலாயின அற்ற சமயமும், வலியற்ற சோர்வும், மெலிவும், கண்கூ டற்றமறைவும், பொருளறுதலின் வறுமையுமாம். - - :




(14) அறு+ஐ அற்று+ஐ அற்றை=சிறுமைமேன்மையற்று கிற் கும் நிலையாதலிற் சிறுமையாயிற்று .




(15) அறு:ஆறு=நதி, வழி. இது முதனிலேண்ேட தொழிலாகுபெ. யர். நதியானது தரையை யறுத் துக்கொண்டும் காடு முதலியனவற்றை யூட றுத்துக்கொண்டும் செல்லுதலின் இப்பெயர்த்தாயிற்று. கல்லுங்காடுமாயி ருந்த கிலத்தை வெட்டி யறுத்துத்திருத்தி மக்கள். நடப்பதற்கு ஏற்றதாக்கு தலின் வழியாயிற்று. - இனி இப்பகுதியினின்றும் பிறக்கும்.வினேவிகற்பங்களைப் பற்றிக் கூறப்புகின் விரியுமென விடுத்தனம். இவ்வர்ற அறு என்னும் இவ்வொரு பகுதியினின்றமே பல சொற்கள் மேன்மேலுங் கிளைத்துப் பலவேறு பொருள் பயப்பனவாமாறு கண்டோம். இவைகளுட்சில நம்முன்னோது