பக்கம்:தமிழ் விருந்து.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 - -தமிழ் விருந்து திருப்பதிமலையில் அப் பெருமான் நின்றருளும் கோலத்தைக் கருமேகத்தின் வடிவாகவே காட்டுகின்றது சிலப்பதிகாரம்: "வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை மின்னுக்கோடி யுடுத்து விளங்குவில் பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையில் ஏந்திச் செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்” என்பது சிலப்பதிகாரச் சித்திரம். கருமேகத்தின் வண்ணம் அருமையான வண்ணமாக, அழகான வண்ணமாகத் தமிழ்நாட்டார்க்குத் தோன்றிற்று. அதனாலேயே அழகுடைய மேகத்தை அவர்கள் 'எழிலி என்னும் சொல்லாற் குறித்தார்கள். எழில் என்பது அழகு, எழில் வாய்ந்த பொருள் எழிலியாகும். திருவள்ளுவர் எழிலி என்ற சொல்லை இனிது எடுத்து ஆள்கிறார். "நெடுங்கடலும் தன்னிர்மை குன்றும் தடிந்துளழிலி தான்நல்கா தாகி விடின்" என்பது திருக்குறள். இக் குறளின் கருத்தும் கற்பனையும் நன்கு அறியத்தக்கதாகும். நெடுங்கடலில் நீர் அதிகமாக உண்டு. ஆயினும் அந் நீரில் ஒரு துளியேனும் தாகந் தீர்த்தற்கு உதவாது. அக் கடலில் உள்ள நீரைக் கருணை வாய்ந்த மேகம் கவர்கின்றது; மழையாக மாநிலத் தார்க்குத் தருகின்றது. இத் தகைய அருளுடைய கார் மேகத்தை எழிலி என்றார் திருவள்ளுவர். இக்குறளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/10&oldid=878308" இலிருந்து மீள்விக்கப்பட்டது