பக்கம்:தமிழ் விருந்து.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழியும் பிற மொழியும் - மலையாளம் 103 மலையாள தேசத்தில் அரசர் குலத்தைச் சேர்ந்தாரிற் சிலர் கோயில் தம்புரான் என்று அழைக்கப்படுவர். திருவாங்கூர் தேசத்தில் பத்துக் கோயில் தம்புரான்கள் இன்றும் சிறப்புற்று வாழ்கின்றார்கள். சென்ற சில நூற்றாண்டுகளாகத் திருவாங்கூர் மன்னராகத் திகழ்ந்தவர்கள் எல்லாம் கிளிமானுர்க் கோயில் தம்புரான் குலத்தைச் சேர்ந்தவர்களே. தமிழில் தம்பிரான் என்பது கடவுளையே குறிக்கும். சிவபெருமானுக்குத் தம்பிரான் என்பது ஒரு பெயர். இதனாலேயே சிவபிரான் தோழராக விளங்கிய சுந்தரமூர்த்திக்குத் தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர் வழங்கலாயிற்று. இக் காலத்தில் சைவ சமயத்தைச் சேர்ந்த சந்நியாசிகளே தம்பிரான் என்று குறிக்கப்படுகின்றார்கள். அரசன் தெய்வத் தன்மை வாய்ந்தவன் என்பது இந் நாட்டுக் கொள்கையாதலால் மலையாளத்தில் தம்பிரான் என்று அரசர் குலத்தார் அழைக்கப் பெறுகிறார்கள். தெய்வத்தை நம் முன்னோர்கள் குளிர்ந்த சோலைகளில் வழிபட்டார்கள். அதற்குரிய சின்னங்கள் மலையாள தேசத்திலும், தமிழ் நாட்டிலும் இன்றும் காணப்படுகின்றன. செங்கோட்டைக்கு அருகே மலையாள தேசத்தில் ஆரியங் காவு என்ற ஊர் இருக்கிறது. காவு என்பது சோலை. எனவே, ஆரியன் காவு என்றால் ஆரியன் சோலை. எனவே ஐயப்பன் வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. தமிழ்நாட்டார் ஐயப்பனை ஐயனார் என்றும், சாத்தன் என்றும் வணங்குவார்கள், காலத்தில் மழை பெய்யாவிட்டால் ஐயனாருக்குப் பொங்கலிட்டுப் பூசை செய்வார்கள்; அறுவடை முடிந்தபின் ஐயனாருக்குச் சிறப்பாக