பக்கம்:தமிழ் விருந்து.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. தமிழ் மொழியும் பிற மொழியும்கன்னடம் பTரத நாட்டில் உள்ள கருநாடக தேசத்தில் வழங்கும் மொழி கன்னடம் எனப்படும். கருநாடகம் என்னும் சொல்லே கன்னடம் என்றாயிற்று. இக் காலத்தில் வழங்கும் கன்னடத்திற்கும் முற்காலத்தில் வழங்கிய கன்னடத்திற்கும் சில வேற்றுமையுண்டு. முற்காலக் கன்னடத்தைப் பழங் கன்னடம் என்பார்கள். ஏறக்குறைய எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த கன்னடத்தைப் பழங் கன்னடம் என்று சொல்லலாம்; பழங் கன்னடத்திற்கும் தமிழுக்கும் பல வகையான ஒற்றுமையுண்டு. சில சொற்களைப் பார்ப்போம் : தமிழில் உள்ள பூ, புல், புலி, பல்லி, பத்து - இவை போன்ற சொற்கள் அப்படியே பழங் கன்னடத்தில் காணப்படுகின்றன. ஆனால், தற்காலக் கன்னடத்தில் பூஹல்வு என்றும், புல் - ஹால்லு என்றும், புலி - ஹாலி என்றும், பல்லி - ஹல்லி என்றும், பத்து - ஹத்து என்றும் வழங்கப்படுகின்றன. ஆயினும், இன்று தமிழில் கற்றோர்க்கு மட்டுமே விளங்கும் இலக்கியப் பதங்கள் பல, கன்னடத்தில் யாவரும் எளிதில் உணரும் தேசியச் சொற்களாக இருக்கின்றன. திங்கள் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். தமிழில் திங்கள் என்பது சந்திரனைக் குறிக்கும். சந்திரனுக்குரிய நாளைத் திங்கட்கிழமை என்கிறோம். இன்னும், திங்கள் என்பது மாசத்தையும் குறிக்கும். பத்து மாசம் சுமந்து பெற்ற தாயின் பெருமையைக் கூறுகின்றது ஒரு தமிழ்ப் பாட்டு :