பக்கம்:தமிழ் விருந்து.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் கற்பனையும் 8 கருத்தைப் பிற்காலத்துப் புலவர் ஒருவரே விரித்துரைத்து விளக்கியுள்ளார் : "பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து பொய்யாக் கொடுக்கும் பிறர்க்கு" என்றார் நன்னெறி ஆசிரியர். மலையிலே மழை பொழிந்து வெள்ளம் பொங்கி எழுகின்றது; அருவியாய் விழுகின்றது; ஆறாகப் பாய்கின்றது. ஆற்று நீர், கால்களிலும் ஏரிகளிலும் நிறைந்து பயிர் பச்சைகளையும் செடிகொடிகளையும்’ வளர்க்கின்றது. இளங் குழந்தையைப் பாலூட்டி வளர்க்கும் தாய்போல் பசும் பயிர்களை நீரூட்டி வளர்ப்பது நதியாகும். ஆதலால், நதியைத் தாயாகவும், நிலத்தைக் குழந்தையாகவும் புலவர்கள் புனைந் துரைப்பாராயினர். சோழ நாட்டை ஊட்டி வளர்ப்பது காவேரியாறு. அந் நதியின் பெருமையாலேயே "சோழவள நாடு சோறுடைத்து" என்று கவிகள் புகழ் வாராயினர். செழுஞ் சோலைகளின் இடையே அழகுற நடந்து செல்லும் காவிரியாற்றைச் சிலப்பதிகாரம் இசைப்பாட்டால் வாழ்த்துகின்றது: "வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி" என்பது சிலப்பதிகாரத்தின் வாழ்த்து. இன்னும் பாண்டி நாட்டின் சிறந்த நதியாகிய வையையைப் "புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி" என்றும், 'பொய்யாக் குலக்கொடி" என்றும் இளங்கோவடிகள் புகழ்ந்துரைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/11&oldid=878328" இலிருந்து மீள்விக்கப்பட்டது