பக்கம்:தமிழ் விருந்து.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#08 தமிழ் விருந்து என்று மணிவாசகர் திருவாசகத்திலே பாடியுள்ளார். ஒருத்தன் என்பது ஆண்பால் ஒருத்தி என்பது பெண்பால். இனி, ஒருவன் என்ற சொல்லைக் கருதுவோம். ஒருவன் என்பதற்கு நேரான பெண்பாற் பெயர் ஒருவள் என்பதாகும். ஆனால், ஒருவள் என்னும் பதம் தமிழ் இலக்கிய மரபில் இல்லை. இக் குறைபாட்டைத் தீர்க்க முன் வந்தனர் சிலர் ஒருவள் என்று கூறுதல் வழுவன்று என்று சில மாநாடுகளில் தீர்மானமும் செய்தனர். ஆயினும், புலவர் உலகம் 'ஒருவளை இன்றுகாறும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்புதுமைப் பதத்தை ஏற்றுக் கொள்வதற்குக் கன்னடத்தை ஆதாரமாகக் காட்டலாம் என்று தோன்றுகின்றது. ஒருவன் என்பது கன்னடத்தில் ஒப்பனு என்றாகும். அதற்கு நேரான பெண்பாற் பெயர் ஒப்பளு. ஒப்பளு என்பது கன்னடத்தில் வழங்குதலால் ஒருவள் என்னும் பதம் தமிழின் நீர்மைக்கு மாறுபட்ட தன்று என்று கொள்வதில் குற்றமொன்றும் இல்லை. சில பழந் தமிழ்ப் பதங்களின் தாதுப் பொருள் கன்னடத்தால் நன்கு விளங்கத் தக்கதாக இருக்கின்றது. எருது என்ற தமிழ்ப்பதம் பழங்கன்னடத்தில் ஏர்து என்று வழங்குகின்றது. அது ஏர் என்ற தாதுவின் அடியாகப் பிறந்த சொல், ஏர்த் தொழிலாகிய உழவுக்குப் பயன்படும் காளைமாடுகளை ஏர்து என்று கன்னடத்திலும், எருது என்று தமிழிலும் வழங்கலா யினர் என்பது நன்கு விளங்குகின்றது. மற்றொரு சொல்லினைப் பார்ப்போம்: வெங்காயத்தைத் தமிழில் உள்ளி என்பர். உள்ளி என்னும் பதம் கன்னடத்திலும் உண்டு. ஈருள்ளி, வெள்ளுள்ளி என உள்ளி இருவகைப்