பக்கம்:தமிழ் விருந்து.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

瓮 தமிழ் விருந்து தமிழ் இலக்கணம் நான் என்பதைக் கூறவில்லை. யான் ஒன்றையே கூறுகின்றது. பிற்காலத்தில் நான் என்பதும் வழக்காற்றில் வந்துவிட்டது. கன்னடத்தில் யான் என்னும் முற்காலச் சொல்லும், நானு என்னும் பிற்காலச் சொல்லும் காணப்படுகின்றன. தமிழில் முன்னிலை ஒருமைப் பெயர் நீ என்பது. அது கன்னடத்தில் நீன் என்று வழங்குகின்றது. தமிழ் நாட்டில் சில பாகங்களில் பேச்சுத் தமிழில் நானு, நீனு என்று வழங்குகின்றார்கள். ஆயினும் நீனு என்பது கொச்சை மொழி என்றே கற்றோரால் கருதப் படுகின்றது. கன்னடத்தில் நீன் என்பது நல்ல சொல்லாகும். திராவிட மொழிகளுக்குரிய சிறப்பெழுத்தாகிய ழகரம் கன்னடத்தில் பொது ளகரமாக மாறிவிட்டது. பல கன்னடப் பதங்களில் ழகரம் நழுவி ஒழிந்தது. உணவுப் பொருளாகிய உழுந்து கன்னடத்தில் உத்து என்றும், கொழுப்பு கொப்பு என்றும், கழுத்து கத்து என்றும் வழங்கக் காண்கின்றோம். குஷ்டநோயைத் தமிழில் பெருநோய் என்று பொது மக்கள் கூறுவர். அந் நோய் இலக்கியங்களில் தொழுநோய் எனப்படும். தேவாரத் திருப்பாசுரத்தில், "அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் நாம்வனங்கும் கடவு ளாரே" என்று பாடினார் திருநாவுக்கரசர். தொழுநோய் கன்னடத்தில் தொன்னு என வழங்குகின்றது.