பக்கம்:தமிழ் விருந்து.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் மொழியைப் பாதுகாக்கும் முறை 箕5 எனவும், ரூப என்பது உருவம் எனவும் வழங்கலாயின. இங்ங்ன்ம் பல வடசொற்கள் தமிழோசையும் வடிவமும் பூண்டு தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றன. வடமொழிக் காவியங்களைத் தழுவித் தமிழ்நூல் செய்த கவிகளும் இவ்விதியை மீறக் கருதவில்லை. கவியரசராக விளங்கும் கம்பர் வடமொழிக் காவியத்திற் கண்ட இராம கதையைத் தமிழிலே தந்தார். அவர் காட்டும் நெறியைச் சிறிது கருதுவோம் : கதாநாயகனை ராமன் என்னாது இராமன் என்றே குறிக்கின்றார்; இராம து.ாதனை ஹ துமன் என்னாது அநுமன் என்றே அழைக்கின்றார்; இராவணன் ஆண்ட நாட்டை லங்கா என்னாது இலங்கை என்றே கூறுகின்றார். இன்னும் வட சொற்களைத் தமிழின் நீர்மைக் கேற்பக் குழைத்து வழங்குவர் கம்பர். ஹிர்தய என்ற வடசொல்லை இதயம் என்று இனிமையாகக் குழைத்தார். " மயிலுடைச் சாய லாளை வஞ்சியா முன்னம் நீண்ட எயிலுடை இலங்கை நாதன் இதயமாம் சிறையில் வைத்தான் ” என்ற கவியில் இதயம் அழகுற இலங்குகின்றது. சிலப்பதிகார ஆசிரியர் டாகினி என்னும் வடசொல்லை இடாகினி என்றாக்கித் தமிழோடு இசைவித்தார். டாகினி என்பது வடமொழியில் ஒரு பேயின் பெயர். இப் பேயின் தன்மையை 'இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய்' என்று இளங்கோவடிகள் இனிதுணர்த்தினார். இத் தகைய பண்பு திராவிட மொழிகளுள் தமிழுக்கே சிறப்ப்ாக உரியதெனத் தோன்றுகின்றது.