பக்கம்:தமிழ் விருந்து.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4G தமிழ் விருந்து தார். ஆற்றுப் பெருக்கற்ற காலத்தும் ஊற்றுப் பெருக் கால் உலகூட்டும் வையையின் கருணை வாழ்த்துதற் குரியதன்றோ? ஆற்றுநீராலும் மழைநீராலும் உணவுப் பொருள் களை விளைவிக்கின்ற உழவரைத் தமிழ்நாடு பாராட்டி மகிழ்ந்தது. உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்துங்கோல்' என்று பாடினார் கம்பர். இக் கருத்தை மனத்திற் கொண்டு, "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-iணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்" என்றார் பாரதியார். அக் காலத்தில் உழவருக்கு இருந்த பெருமை, திருவள்ளுவர் முதலாய தலைமைப் புலவர்கள் வழங்கியுள்ள கற்பனைகளாலும் விளங்கும். வில்லெடுத்துப் போர் செய்யும் வீரனை 'வில்லேர் உழவன்' என்றும் சொல்லாற்றல் வாய்ந்த கவிஞனைச் 'சொல்லேர் உழவன்' என்றும் குறித்தார் திருவள்ளுவர். "வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை' என்பது திருக்குறள். வேற்படை தாங்கிய வீரனை 'அயில் உழவன்' என்றார் சிந்தாமணி ஆசிரியர்; வாளேந்திய வீரனை 'வாள் உழவன் என்றார்கள். எனவே, வீரரையும் புலவரையும் உழவராகக் கண்ட பெருமை பண்டைத் தமிழ் நாட்டுக்குரியது. இயற்கையோடு கலந்து வாழ்ந்த தமிழரின் பெருமை சில கற்பனைகளால் சிறந்து விளங்குகின்ற து. நல்ல நிறமும் நறுமணமும் உடைய மலர்கள் எக் காலத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/12&oldid=878352" இலிருந்து மீள்விக்கப்பட்டது