பக்கம்:தமிழ் விருந்து.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் மொழியைப் பாதுகாக்கும் முறை 售9 மொழிகளிலும் காணப்படும் எழுத்துக்களைப் பொது எழுத்துக்க்ள் என்றும், தமிழிலே மட்டும் காணப்படும் எழுத்துக்களைச் சிறப்பெழுத்துக்கள் என்றும் தமிழிலக்கணம் கூறுவதாயிற்று. இக் கொள்கை பரவியிருந்த தமிழ் நாட்டில் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு சிறந்த அறிஞர் ஒருவர் தோன்றினார். கால்டுவெல் என்பது அவர் பெயர். இன்று அவர் பெருமை இலக்கண உலகத்தில் குன்றிலிட்ட விளக்குப்போல் நின்று நிலவுகின்றது. அவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் ஒர் உயரிய நூல் இயற்றினார்; பாரத நாட்டின் தென்பாகத்தில் வழங்கும் மொழிகள் எல்லாம் ஒரு பெருங்குடும்பத்தைச் சேர்ந்தவை என்று தக்க சான்றுகளால் நிறுவினார்; அவற்றின் சொற்களும் இலக்கணக் கூறுகளும் அடிப்படையில் ஒற்றுமை யுடையன என்று அறிஞர் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் முறையில் எடுத்துக் காட்டினார். இப் பேராசிரியரைத் 'திராவிட மொழி நூலின் தந்தை' என்று இலக்கண உலகம் போற்றுகின்றது. ஏனைய மொழிகளில் இல்லாத இலக்கணம் ஒன்று தமிழிலே உண்டு. அது பொருள் இலக்கணம் எனப்படும். இலக்கியங்களில் எடுத்தாளப்படும் பொருளை அகப்பொருள் என்றும், புறப்பொருள் என்றும் தமிழிலக்கண நூலோர் பாகுபாடு செய்தார்கள். பொதுவாக இன்பம் அகத்திலும், வீரம் புறத்திலும் அடங்கும். காதலர் இருவர் கருத் தொருமித்து நிகழ்த்தும் இல் வாழ்க்கையே இவ்வுலகி லுள்ள இன்பங்களுள் தலை சிறந்ததாதலால் அகப் பொருள் இலக்கணம் காதலையும் கற்பையும் விரித்துச்