பக்கம்:தமிழ் விருந்து.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தமிழ்_விருந்து சிறப்பு வாய்ந்து விளங்கிய மூவேந்தரும் பெரும்பாலும் பொறுப்பு உணர்ந்தவர்களாகவே அரசு புரிந்தனர். நாட்டில் பசியும் பிணியும் பகையும் நீக்கித் குடிகளைப் பாதுகாக்கும் பொறுப்புடையவன் அரசனே. பசிநோய் ஒழியவேண்டுமாயின் உணவுப் பொருள்கள் போதிய அளவு நாட்டிலே விளைதல் வேண்டும். உணவுப் பொருள்கள் விளைவதற்கு மழை உரிய காலத்தில் பெய்ய வேண்டும். பருவத்தில் மழை பெய்யா தொழிந்தால் உயிர்கள் எல்லாம் பசியால் நலிந்து வருந்தும். " விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியன்.உலகத்(து) உண்ணின்று உடற்றும் பசி” என்றார் திருவள்ளுவர். அரசன் அறநெறி தவறாமல் ஆண்டுவந்தால் மழை தப்பாமல் பெய்யும் என்பது தமிழ் நாட்டார் கொள்கை. எனவே, மழை பெய்து நாடு செழித்தால் குடிகள் மன்னனைப் போற்றுவர், மழை பெய்யாதொழிந்தால் மன்னனைத் துாற்றுவர். இவ்வுண்மை, " மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் காவலர்ப் பழிக்கும்.இக் கண்ணகன் ஞாலம்" என்னும் புறநானூற்று அடிகளால் அறியப்படும். இங்ங்னம் பசிநோயை நீக்கும் பொறுப்புடைய அரசன், பகைவரால் குடிகள் வருந்தாமலும் பாதுகாக்கும் கடமை யுடையவன் குடிகளைத் துன்புறுத்தும் பகைவர் நாட்டின் உள்ளேயும் இருப்பர் வெளியேயும் இருப்பர். நாட்டின் உள்ளே இருந்துகொண்டு கொலையும்