பக்கம்:தமிழ் விருந்து.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்திற் கண்ட அரசு 123 கொள்ளையும் கொடுமையும் புரிவோரை அடியோடு அழித்தல் அரசன் கடமை. "கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்" என்று திருக்குறள் கூறுகின்றது. பசும் பயிர் செழித்து வளர்வதற்காக அதனிடையே முளைக்கும் களையைப் பறித்தெறிதல் போன்று, நாட்டிலே குடிகள் நலமுற்று வாழ்வதற்காக அரசன் கொடியவர்களைக் கொன்று ஒழித்தல் வேண்டும் என்பது இக் குறளின் கருத்து. குடிகளைத் துன்புறுத்தும் கொடியவர்கள் இல்லாத நாடே நாடாகும். முற்காலத் தமிழரசர்கள் கள்வர்க்குக் கடுந்தண்டம். விதித்தார்கள். களவு செய்தவனுக்குக் கொலைத் தண்டனை விதித்தல் முறையாகக் கருதப்பட்டது. சிலப்பதிகாரம் இதற்குச் சான்று தருகின்றது. அரண்மனைச் சிலம்பைக் களவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கோவலனுக்குப் பாண்டியன் கொலைத் தண்டனை விதித்தான். கொலையுண்டிறந்த கோவலன் மனைவி, மாளிகையிற் போந்து மனந் துடித்துக் கண்ணிர் வடித்தாள். அதைக் கண்ட மன்னவன், "மாதே, நின் கணவன் களவு செய்தான்; அக் குற்றத்திற்காகக் கொல்லப் பட்டான். இதில் கொடுமை யொன்றும் இல்லையே." "கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேற் கொற்றம் காண்” என்று நீதி முறையை எடுத்துரைத்தான். இவ்வாறு கள்வர்க்குக் கடுந் தண்டனை விதித்தமையாலேயே