பக்கம்:தமிழ் விருந்து.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 தமிழ் விருந்து முற்காலத்தில் களவு குறைந்திருந்தது போலும், ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஸ்ட்ராபோ (Strabo) என்னும் யவன ஆசிரியர், 'பாரத நாட்டில் களவாடுவோர் இல்லை' என்று எழுதியுள்ளார். இதனைப் பார்க்கும் பொழுது, "கள்வார் இலாமைப் பொருள்காவலும் இல்லை uirīgib கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ' என்று கம்பர் புனைந்துரையாகக் கூறினாரல்லர்; உண்மையே உரைத்தார் எனக் கொள்ளலாகும். இன்னும் நாட்டின் தலைவனாகிய அரசன் மாற்றரசர்களால் குடிகளுக்குத் துன்பம் நேராத வண்ணம் காக்கும் கடமையும் உடையவன். மண்ணாசை கொண்டு மாற்றரசர் படை எடுப்பாரா யின் அவர் படையை வென்றழித்தல் மன்னவன் கடமை. முற்காலத்தில் மாற்றரசர் படை எடுப்புப் பெரும்பாலும் தரை வழியாகவே நிகழ்ந்தது. சில வேளைகளில் கடல் வழியாகவும் ஆகாய வழியாகவும் பகைவர் தாக்கியதாகத் தெரிகின்றது. இவ்விதம் பசி நோயாலும் பகைவர் கொடுமை யாலும் குடிகள் வருந்தாமல் பாதுகாப்பவன் அரசனே யாதலால் காவலன் என்னும் சொல்லின் பொருளைத் திருத்தொண்டர் புராணம் இயற்றிய சேக்கிழார் தெளிவுற விளக்கிப் போந்தார். "மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலை தானத னுக்கிடை யூறு தன்னால் தன்பரிச னத்தால் ஊன மிகுபகைத் திறத்தால் கள்வ ரால்உயிர் தம்மால் ஆணபயம் ஐந்தும் தீர்த்து அறங்காப்பான் அல்லனோ”