பக்கம்:தமிழ் விருந்து.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தமிழ் விருந்து அதுவே முறையான தீர்ப்பென்று வழக்காளர் இருவரும் மனமகிழ்ந்து சென்றார்கள். இக் கதை 'பழமொழி என்ற தமிழ் நூலிற் குறிக்கப்படுகிறது. " உரைமுடிவு காணான் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப-நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமற் பாகம் படும்” என்பது பழமொழிப் பாட்டு. இவ் வண்ணம் முறை செய்து குடிகளைக் காப்பாற்றும் மன்னரைக் கடவுளுக்கு ஒப்பாகக் கருதினர் தமிழ் நாட்டார். இறைவன் என்ற சொல் கடவுளையும் குறிக்கும் அரசனையும் குறிக்கும். "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்" என்பது திருவள்ளுவர் வாக்கு தமிழ் நாட்டார் பொன்போற் போற்றும் நீதி நெறிகளை யெல்லாம் தொகுத்து நீதிநெறி விளக்கம்' என்ற நூல் இயற்றிய குமரகுருபர அடிகள், அரசனே எல்லார்க்கும் தெய்வம் என்ற கருத்தை, "குலமகட்குத் தெய்வம் கொழுநனே மன்ற புதல்வர்க்குத் தந்தையும் தாயும்-அறவோர்க்கு அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம் இலைமுகப் பைம்பூண் இறை" - என்னும் வெண்பாவால் எடுத்துரைத்தார். 'கற்புடைய மங்கைக்குக் கணவனே தெய்வம்: பாலர்க்கு அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்: அறவோர்க்குக் குருவே தெய்வம், அனைவோர்க்கும் அரசனே தெய்வம்' என்பது இப்பாட்டின் கருத்து. நாடாளும் அரசனிடம் தெய்வ ஒளி விளங்கும் என்று