பக்கம்:தமிழ் விருந்து.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தமிழ். விருந்து நல்லறிவும் நல்லொழுக்கமும் வாய்ந்தவர்களே பெரும்பாலும் மந்திரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் களென்று தெரிகின்றது. இதைக் குறித்துப் பழைய தமிழ் நாட்டரசன் ஒருவன் பாடியுள்ள பாட்டைப் பார்ப்போம் : "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்" என்பது பாண்டியன் நெடுஞ்செழியனது பாட்டு, கல்வியறிவின் பெருமையைக் கூறுகின்றான் கற்றறிந்த பாண்டியன், எல்லோரும் கல்வி கற்றல் வேண்டும்; பாடுபட்டும், பணம் கொடுத்தும் படித்தல் வேண்டும். கல்வியறிவு எல்லாச் சிறப்பையும் தரும் அறிவுடைய ஒருவனை அரசனும் வருக என்றழைத்து அமைச்ச னாக்குவான்; அவன் சொல் வழியே அரசு புரிவான் என்று பாண்டி மன்னன் கூறுகின்றான். முற்காலத்து மன்னர் மந்திரிகளைத் தெரிந்தெடுத்த முறை இப் பாட்டால் விளங்குகின்றது. எக் குடியிற் பிறப்பினும் யாவனே யாயினும் மன்னவன் கற்றறிந்தவனையே ஆதரித்தழைத்து மந்திரியாக்குதல் வழக்கம். வயது குறைந்தவனாயினும், உருவிற் சிறியவனாயினும், அறிவு நிறைந்தவனாயிருந்தால் அவனையே அரசன் அமைச்சனாக்கிக் கொள்வான். மன்னருக்கு நன்னெறி காட்டும் பொறுப்புடைய வர்கள் மந்திரிகளேயாவர். ஆதலால், எப்பொருள் எத் தன்மையதாயினும் அப்பொருளை அமைச்சர்கள் நன்கு