பக்கம்:தமிழ் விருந்து.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்திற் கண்ட அமைச்சு 售3霞 ஆராய்ந்து தெளிவார்கள் அவ்விதம் ஆராய்ந்து கண்ட கொள்கையை நேர்மையாகவும் இனிமையாகவும் மன்னனிடம் எடுத்துரைப்பார்கள்; தாம் கொண்ட கொள்கையை அரசன் கொள்வானோ, அன்றித் தள்ளுவானோ என்று கருதி நெஞ்சம் குலைய மாட்டார்கள். நாட்டின் நலத்தையும், அரசன் நலத்தை யும் கண்ணும் கருத்துமாகக் காக்கும் நல்லமைச்சர் நடந்து கொள்ளும் முறையைக் கலிங்கத்துப்பரணி என்னும் சிறந்த நூலிற் காணலாம். கலிங்க தேசத்தைச் சிற்றரசன் ஒருவன் ஆண்டுவந்தான். அவன் சோழ மன்னனுக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தை உரிய காலத்தில் செலுத்தத் தவறிவிட்டான். அதையறிந்த சோழன், சீற்றம் கொண்டு கலிங்கத்தரசனை வெல்லுமாறு தன் பெருஞ் சேனையை அனுப்பினான். கருங்கடலில் எழுந்து வரும் அலைபோல் சோழ மன்னன் படை அணியணியாகக் கலிங்க நாட்டின் எல்லையை வந்தடைந்தது. " இடிகின் றமனதில், எரிகின் றனபதி எழுகின் றனபுகை, பொழிலெல்லாம் மடிகின் றனகுடி, கெடுகின் றணம்இனி வளைகின் றனபடை பகையென்றே " குடிகள் எல்லோரும் ஓலமிட்டார்கள். அவ்வோலம் கலிங்கத்தரசன் செவியில் விழுந்தது. தன் பலமும் மாற்றான் பலமும் அறியாத அவ் வரசன் வீரம் பேசத் தொடங்கினான் : " கான் அரணும் மலையரணும் கடலரணும் சூழ்கிடந்த கலிங்கர் பூமி தான்அரண முடைத்தென்று கருதாது வருவதும்அத் தண்டு போலும் ”