பக்கம்:தமிழ் விருந்து.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கடிக்கும்வல்லரவும் கேட்கும் மந்திரம் களிக்கின்றோயை அடுக்கும்ாது அடாதென்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி இடிக்குநர் இல்லை, உள்ளார் எண்ணிய தெண்ணி உன்னை முடிக்குநர் என்ற போது முடிவன்றி முடிவ துண்டோ என்று இராவணனைப் பார்த்துச் சீதை பேசுகின்றாள். 'இலங்கை அரசனாகிய நீ வெறிகொண்டு திரிகின்றாய். தீநெறியிலே திளைக்கின்றாய். தவறு செய்யும் உன்னைத் தடுத்துரைப்பார் எவரும் இந் நாட்டில் இல்லையே தக்கது. இது, தகாதது இஃது என்று வகுத்துரைக்க வல்லார் இங்கில்லையே ! அமைச்சர் என்று பேர் படைத்தவர்கள், நீ எண்ணியதையே எண்ணுகின்றார் கள்; உன் செவிக்கினிய சொற்களையே சொல்லு கின்றார்கள். அன்னார் உனக்கு உறுதி கூறுகின்றா ரல்லர்; இறுதியே சூழ்கின்றார்கள். இத்தகைய போலி அமைச்சரைத் துணைக்கொண்ட உனக்கு நாசம் வருமேயல்லாமல் நலம் உண்டாகுமோ என்பது சீதையின் வாய்மொழி. ஒரு நாட்டின் மன்னன் நெடுங்காலம் அரசு வீற்றிருந்து ஆள்வதற்கும் மந்திரியே காரணம்; அவன் நிலை குலைந்து அழிவதற்கும் மந்திரியே காரணம் என்று திருவள்ளுவர் அருளிப் போந்தார். தவறான நெறியிலே அரசனைச் செல்லாமல் தடுக்க வல்லவன் அமைச்சனே. ஆதலால், இச்சகம் பேசும் போலி அமைச்சனைத் துணைக்கொள்ளாது இடித்துச் சொல்லித் திருத்தும் மந்திரியைத் துணைக்கொண்ட மன்னவன் கேடுறமாட்டான் என்பது திருவள்ளுவர் கொள்கை'