பக்கம்:தமிழ் விருந்து.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்திற் கண்டதுது 135 " இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர் ” என்னும் திருக்குறளால் இவ் வுண்மை விளங்கும். இக் கருத்தைப் பின்னும் வற்புறுத்துகின்றார் திருவள்ளுவர். தவறான வழியில் தலைப்படும் அரசனை இடித் துரைத்துத் திருத்தும் அமைச்சர் இல்லாவிட்டால் பாகனில்லாத யானைபோல் நெறியல்லா நெறிச் சென்று அரசு தானே கெடும். " இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானும் கெடும் ” என்பது திருவள்ளுவர் வாக்கு. பொது நலமும் நீதியும் பேணும் அமைச்சரே நல்லமைச்சர்; சுயநலமும் சூழ்ச்சியும் உடைய அமைச்சர் போலி அமைச்சர். அறத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு நல்லமைச்சரை நாடும்; மறத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு போலி அமைச்சரையே பொறுக்கிக் கொள்ளும். நல்லமைச்சரை ஆளும் அரசே வாழும்; போலி அமைச்சரை ஆளும் அரசு வீழும். இதுவே சிறந்த தமிழ் நூல்களின் கருத்து. 18. தமிழ் இலக்கியத்திற் கண்ட தூது இந் நாட்டில் தொன்றுதொட்டுத் தூது என்பது உண்டு. அரசர்கள் துரதனுப்பியுள்ளார்கள்; அன்பர்கள் துரது விடுத்துள்ளார்கள்; புலவர்கள் தூது போக்கியுள்ளார்கள். ஞானிகளும் தூது முறையைக் கையாண்டிருக்கிறார்கள் என்றால் துதின் தன்மை அறியத்தக்கதன்றோ?