பக்கம்:தமிழ் விருந்து.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#35 தமிழ் விருந்து அரசர்க்குரிய சிறந்த அங்கங்களில் தூதும் ஒன்றாகும் என்று திருவள்ளுவர் கருதுகின்றார். இரு மன்னர்; கிடையே மாறுபர்டு நிகழ்ந்தால் அப் பிணக்கத்தைத் தீர்த்து இணக்கத்தை உண்டாக்கும் பொறுப்பு துரதர்க்கே உரியதாகக் கூறப்படுகின்றது. இதனாலேயே அன்பும், அறிவும், ஆராய்ந்த சொல்வன்மையும் தூதருக்கு இன்றியமையாத நலங்கள் என்று திருக்குறள் கூறுவதாயிற்று. இத் தகைய தூதர் பெருமையைக் காவியங்களிலும் காணலாம். பாண்டவர்க்கும் கெளரவர்க்கும் பிணக்கம் நேர்ந்த பொழுது பாண்டவர்க்காகத் துரியோதனனிடம் ஆlது சென்றான் கண்ணன். அப் பெருமான் துர்து நடந்த செம்மையை, "மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை நூற்றுவர்.பால் நாற்றிசையும் போற்றத் தொடர்ந்தா ரணம்முழங்கப் பஞ்சவர்க்குத் அது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராயணா என்னாத நாவென்ன நாவே ” என்று சிலப்பதிகாரம் பாராட்டுகின்றது. பாண்டவர் து தனாகிய கண்ணனைப் போன்று இராம தூதனாயினான் அனுமன் நிறைந்த பேரன்பும், சிறந்த கலைஞானமும் நிகரற்ற சொல்வன்மையும் வாய்ந்த அநுமன் இராமனுக்காகத் தூது சென்று, அரும் பெருஞ் செயல்களைச் செய்தான். "அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற் காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் - * ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான்"