பக்கம்:தமிழ் விருந்து.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்திற்_கண்ட-தூது 14? ஒருவாறு தீரும்; உள்ளத்தைக் கவர்ந்து எழுகின்ற உணர்ச்சிக்கு ஒரு போக்கு விட்டவாறாகும். இந் நலங்கள் அமைந்திருத்தலால் தூது என்பது நாளடைவில் தமிழ் மொழியில் ஒருவகைப் பிரபந்த மாயிற்று. தூதுக்குத் தெரிந்தெடுத்த பொருளைப் பரிந்தழைத்து முகமன் கூறி, தலைவனுடைய நலங்களை அதனிடம் எடுத்துரைக்கும் முறையில் அமைந்தது'தூது நூல்' எனப்படும். இத் தகைய நூல்கள் தமிழிலே பலவுண்டு. மலர்களைத் தூதுவிட்டார் சிலர்: மேகத்தையும் தென்றலையும் தூதுவிட்டார் சிலர்; பாடுபட்டுத் தேடும் பணத்தைத் துது அனுப்பின்ார் ஒரு தமிழ்ப் புலவர். பண்புடைய பசுந் தமிழையே தூதுவிட்டார் மற்றொரு தமிழ்ப் புலவர். பண விடு தூது என்னும் நூலில் பணத்தின் சிறப்பும், பாட்டுடைத் தலைவனாகிய மாதை வேங்கடேசனது மாண்பும் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. துதுப் பொருளாகிய பணத்தை நோக்கி "வாழ்வதும் உன்னுடைய வாழ்வாமே வாழ்வொழித்துத் தாழ்வதுவும் உன்னுடைய தாழ்வாமே கூழ்குடித்துக் கட்டப் புடைவையின்றிக் கந்தையுமாய்ச் சென்றுசெல்வர் கிட்டப் பலகாலும் கெஞ்சிப்போய் - முட்டமுட்டத் தாங்குவா ரற்றுத் தடுமாறி ராப்பகலாய் ஏங்குவார் ஏக்கம்உன் ஏக்கமே - ஓங்கும் பணமென்னும் உன்னைப் படைக்காத சென்மம் பினமென்பர் கண்டாய் பெரியோய்” என்று புலவர் கூறுகின்றார். இனி, மதுரைச் சோமசுந்தரக் கடவுளிடம் காதல் கொண்ட ஒரு தலைவி தமிழ் மொழியை அவரிடம்