பக்கம்:தமிழ் விருந்து.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 தமிழ் விருந்து தூதனுப்பும் பான்மையில் அம்ைந்தது'தமிழ்விடுதூது என்னும் பிரபந்தம். இந் நூலில் கூறப்படும் தமிழின் சிறப்பைச் சிறிது காண்போம் : " இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்" என்று தம் தமிழ் ஆர்வத்தை அறிவிக்கும் புலவர், "எல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற > வல்லாய், உனக்குரைக்க வல்லேனோ - சொல்லியவுன் ஈரடிக்குள் ளேஉலகம் எல்லாம் அடங்குமெனின் நேரடிக்கு வேறே நிலனுண்டோ" என்று தமிழில் தலைசிறந்த நூலாகிய திருக்குறளைப் போற்றிப் புகழும் முறை புதியதோர் இன்பம் தருவதாகும். 19. தமிழ் இலக்கியத்திற் கண்ட பக்தி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழ் நாடு இவ் வுலகத்திலே பெருமையுற்று விளங்கிற்று. தமிழ் நாட்டுச் செல்வம் பிற நாட்டாரால் நன்கு மதிக்கப் பெற்றது. திரை கடலோடியும் திரவியம் தேடினர் தமிழர் கடல் சூழ்ந்த நாடுகளிற் குடியேறினர்; பாழாய்க் கிடந்த இடங்களைப் பண்படுத்தினர்; மெய் வருந்தி உழைத்து அந் நாடுகளையும் செழிக்கச் செய்தனர். சுருங்கச் சொல்லின் தமிழர் சென்ற இடம் எல்லாம் சீருற்றது; அமர்ந்த இடம் எல்லாம் அழகுற்றது. இக் காலத்தில் இது கனவாகத் தோன்றலாம். ஆயினும் எத் திசையும் புகழ் மணக்க இந் நாடு முன்னொரு காலத்தில் இருந்தது என்பது எவரும் மறக்க முடியாத உண்மையாகும். . -