பக்கம்:தமிழ் விருந்து.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்திற் கண்ட பக்தி 145 தோன்றினார்கள். பக்திரசம் நிறைந்த பாடல்களைப் பாடினார்கள், ஊர் ஊராகச் சென்று உருக்கமான பாட்டிசைத்தார்கள்; கோவில் கண்ட இடமெல்லாம் குழைந்து குழைந்து பாடித் தொழுதார்கள். பக்திச் சுவை சொட்டும் பாடல்களால் உள்ளக் கிளர்ச்சி உண்டாயிற்று. எங்கும் சமய உணர்ச்சியே பொங்கித் ததும்பிப் பூரணமாய் நின்றது. அந் நிலையில் சமண சமயத்தார்க்கும் இந்து சமயத்தார்க்கும் பெரும்போர் மூண்டது இரு திறத்தார்க்கும் வாக்குவாதம் மிகத் தாக்காக நடைபெற்றது. அதன் பயனாகச் சமண சமயம் ஆதிக்கம் இழந்தது. சைவமும் வைணவமும் வீறு பெற்றன. சைவ சமயத் தலைவர்களாகிய நாயன்மார் களும், வைணவ சமயத் தலைவர்களாகிய ஆழ்வார் களும் மக்கள் உள்ளத்தைப் பக்தி மார்க்கத்தில் செலுத்த முயன்றார்கள்; எல்லாம் வல்ல இறைவனையே பாடவேண்டும் என்று பணித்தார்கள். இறைவனது மெய்யான புகழே தமிழ்ப் பாட்டில் அமையத்தக்க பொருள் என்று அறிவுறுத்தினார்கள். பொய்ப் பொருள் உடைய மன்னரையும் செல்வரையும் பாடாது, மெய்ப் பொருளாகிய கடவுளையே பாடும் வண்ணம் நம்மாழ்வார் புலவர்களை வேண்டுகின்றார். " வம்மின் புலவீர்தும் மெய்வருந்திக் கைசெய்து உய்ம்மினோ இம்மன் னுலகில் செல்வர் இப்போ தில்லை நோக்கினோம் நும்இன் கவிகொண்டு நும்தும் இட்டா தெய்வம் ஏத்தினால் செம்மின் சுடர்முடிஎன் திருமா லுக்குச் சேருமே” என்பது திருவாய் மொழி. அருமை வாய்ந்த புலவர்களை நம்மாழ்வார் நயந்து நோக்கி, வாக்கு வளம் பெற்ற கவிகளே, இங்கே வாருங்கள்! மெய் வருந்த உழைக்துப் பிழையுங்கள். பொரு