பக்கம்:தமிழ் விருந்து.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$45 தமிழ் விருந்து ளுடையவனைப் பாடி வாய் விளைந்து உண்ண விரும்பாதீர்கள். இனிய கவி பாடி உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். அவ் வழிபாடு முழுமுதற் கடவுளையே சேரும் என்று வழி காட்டியருளினார். மண்ணரசாளும் உரிமை பெற்ற மன்னரும் இந்த மனப்பான்மை யுடையராய் இருந்தார் என்று தெரிகின்றது. சேரநாட்டு மன்னராய் விளங்கினார் குலசேகரப்பெருமாள். மாநிலமாளும் மன்னனாய்ப் "தேளர் பூஞ்சோலைத் திருவேங் கடச்சுனையில் மீனாய்ப் பிறக்கும்" பேறு பெற அவர் விரும்புகின்றார். அரியாசனத்தில் அமர்ந்து அரசாளுவதிலும் திருமால் நின்றருளும் திருவேங்கட மலையில் ஒரு படியாய்க் கிடந்து அவர் பவளவாயைக் காண ஆசைப்படுகின்றார். இன்னும் அவர் மனத்தில் அமைந்த ஆர்வம், " கம்பதை யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன் எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல் தம்பகமாய் நிற்கும் தவமுடையோன் ஆவேனே." என்னும் பாட்டால் இனிது விளங்குகின்றது. இவ்வாறு நரனைப் பாடாது நாராயணனையே பாடிய ஆழ்வார்களும், சீவர்களைப் பாடாது சிவனையே பாடிய நாயன்மார்களும், நாள்தோறும் தமிழை வளர்த்தார்கள். தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய திருஞான சம்பந்தரை, "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தர் என்று