பக்கம்:தமிழ் விருந்து.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 தமிழ்_விருந்து 2. புராதனப் போர்-படையெடுப்பு இக் காலத்தில் நடந்துவரும் பெரும் போரால் விளையும் எல்லையற்ற தொல்லையை அறியாதார் யாருமில்லை. உலகம் முழுவதையும் அலைத்துக் குலைத்து வருத்துகின்ற இப் போரின் கொடுமையைக் காண்பவர்கள் முற்காலத்தில் நிகழ்ந்த போர்களைக் குறித்து அறிந்துகொள்ள விரும்புதல் இயற்கையே யாகும். தமிழ்நாட்டில் முற்காலத்தில் நிகழ்ந்த பெரும் போர்கள் காவியங்களில் நன்றாக விரித்துரைக்கப்பட்டு இருக்கின்றன. பெரும்பாலும் ஆசையே போருக்கு அடிப்படையாகும். மன்னர் மனத்தில் எழுகின்ற ஆசைக்கோர் அளவில்லை என்று தாயுமான அடிகள் கூறிப்போந்தார். "ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டிஆளினும் கடல்மீதிலே ஆனை செலவே நினைவர்" என்று அப்பெரியார் அருளிய திருவாக்கின் உண்மை இக் காலத்தில் நடைபெறும் போரால் நன்கு விளங்குகின்ற தன்றோ? ஆயினும், முற்காலப் போருக்கும் தற்காலப் போருக்கும் நிரம்ப வேற்றுமை உண்டு. ஒர் அரசன் படை மற்றோர் அரசன் படையைத் தாக்கி வீரம் விளைவிக்குமே யன்றி, குடிகள் எல்லோரையும் அழித்து நாட்டைச் சுடுகாடாக்குகின்ற கொடுமை நிகழ்ந்ததில்லை. பகைவர் நாட்டின்மீது படை யெடுக்கும் மன்னர், போருக்கு ஆற்றாதவர்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/16&oldid=878439" இலிருந்து மீள்விக்கப்பட்டது