பக்கம்:தமிழ் விருந்து.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தமிழ் விருந்து செங்குட்டுவன் என்பவன் சிறந்த சைவன். அவன் தம்பியாகிய இளங்கோவடிகள் சிறந்த சமண முனிவர் அம் முனிவரே சிலப்பதிகார ஆசிரியர். அவர்கள் இருவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தார்கள். இத் தகைய நல்லோர் வாழ்ந்த காலம் சங்க காலம் என்று சொல்லப்படுகின்றது. சமயச் சண்டையும் சச்சரவும் இல்லாதிருந்த சங்க காலமே தமிழ் நாடு எல்லா வகையினும் ஏற்றமுற்றிருந்த காலம். இக்காலத்திற்குப் பின் சமயச் சண்டைகள் மூண்டன. ஆண்டவன் பெயரால் சண்டையிட்டு மாண்டார் பலர். சமயச் சண்டை இக் காலத்தில் அவ்வளவாக இல்லை. சமரச சன்மார்க்கமே இந்நாளில் அறிவுடையோர் போற்றும் சமயம். தர்க்கமும் குதர்க்கமும் ஒழிந்து சமரசம் பரவும் காலத்தை ஆர்வத்தோடு எதிர் நோக்கினார் தாயுமானார். " தர்க்கமிட்டுப் பாழாம் சமயக் குதர்க்கம்விட்டு நிற்கும்.அவர் கண்டவழி நேர்பெறுவ தெந்நாளோ" என்று பாடினார் அப் பெரியார். அந் நாளே தமிழ் நாட்டுக்கு நன்னாள் ஆகும். " வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர் "

  • * *