பக்கம்:தமிழ் விருந்து.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராதனப் போர் - படையெடுப்பு 49 போர்ப்பறை முழங்கும். அப் பறையின் ஒசை நாற்றிசையும் சென்று அதிரும். அவ் வோசையைக் கேட்ட போர் வீரர்கள் போர்க்கோலம் புனைந்து மிக்க ஆர்வத்தோடு புறப்படுவார்கள். வீரத்தாய்மார்கள் தம் பிள்ளைகளை ஆசி கூறி அனுப்புவார்கள். வீர மனைவியர் விருப்புடன் தம் காதலர்க்கு விடை கொடுப்பார்கள். நால்வகைச் சேனை பழந் தமிழ் நாட்டிலிருந்ததாகத் தெரிகின்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை காலாட் படை ஆகிய நான்கும் திரண்டெழுந்தவுடன் அரசன், படைத் தலைவரோடு சென்று அவற்றைப் பார்த்து மகிழ்வான்; வீரரது ஆரவாரத்தைக் கேட்டு அகம் களிப்பான்; தானும் அவர்களுடனிருந்து உணவருந்தி அவர்களுக்கு ஊக்கமளிப்பான். சேனை புறப்பட்டுச் செல்லும் வழியில் அரசனும் படைத் தலைவர்களும் தங்குதற்குரிய பாடிவீடுகள் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு அரசனும் வீரரும் அமர்ந்து இளைப்பாறும் பொழுது ஆடலும் பாடலும் நடைபெறும். இவ்வாறு பண்டையரசர்கள் படையெடுத்த மாட்சியைச் சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காவியத்தில் சிறப்பாகக் காண்கிறோம். சேர நாட்டை யாண்ட செங்குட்டுவன் என்னும் மன்னவன் வடநாட்டின்மீது படையெடுத்த வரலாறு அக் காவியத்தில் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. "வடநாட்டரசர் இருவர், தமிழ்நாட்டாரைப் பழித்துப் பேசினார்களென்று சேர மன்னவன் கேள்விப்பட்டான் அளவிறந்த சீற்றம் கொண்டான். 'அருந்தமிழ் அரசரின் ஆற்றலை யறியாது இகழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/21&oldid=878455" இலிருந்து மீள்விக்கப்பட்டது