பக்கம்:தமிழ் விருந்து.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்க்களங்கள் 25 புறப்பட்டாள். அங்கே கால்மாடு தலைமாடாக வீரர்கள் சாய்ந்து கிடந்தார்கள். அவர் உடம்பினின்ԱԱ/ பாய்ந்த குருதி ஆறாக ஓடிற்று. முகத்திலும் தோளிலும் பசும்புண் பட்டுக் கிடந்தார் சிலர். மடிந்த வாயினராய் மாண்டு கிடந்தார் சிலர். இவ்வாறு விழுந்து கிடந்த வீரருள்ளே அம் மங்கை தன் கணவனைக் காணாது மயங்கினாள். அவன் என்னாயினன் என்று கேட்டறி வதற்கு அமர்க்களத்தில் யாருமில்லை. அந் நிலையில் வீரர் வணங்கும் தெய்வமாகிய பைரவியை வினவலுற்றாள். "பொருதடக்கை வாள்.எங்கே? மணிமார் பெங்கே? போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத பருவயிரத் தோள்.எங்கே? எங்கே? என்று பைரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின் ! "ஐயோ! தெய்வமே ! என் கணவனுடைய வலிமை சான்ற கை எங்கே 2 அக் கையிலமைந்த வாள் எங்கே? மாற்றார்க்கும் புறங்கொடாத மணி மார்பு எங்கே? எங்கே?' என்று மங்கை பைரவியைக் கேட்கின்றாள். இனிக் கடைசியாக நூற்றாண்டுகளுக்கு முன்னே தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வீரத் தியாகத்தைக் காண்போம்: பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரன் சேனைக்கும் மற்றொரு சேனைக்கும் பெரும்போர் நடந்தது. பாளையக்காரன் தம்பியாகிய ஊமைத்துரை என்பவன் அச் சேனையை எதிர்த்துப் போர் செய்தான். பகல் முழுவதும் போர் நிகழ்ந்தது. அந்திமாலை வந்தடைந்தபோது மாற்றார் சேனை வெற்றிபெற்று மீண்டது. பாளையக்காரன் சேனையில் பலர் விழுந்து கிடந்தார்கள். பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து போர்புரியச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/27&oldid=878466" இலிருந்து மீள்விக்கப்பட்டது