பக்கம்:தமிழ் விருந்து.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தமிழ் விருந்து தம்பிக்கும் ஒரு சொத்தைக் குறித்து நீதி மன்றத்தில் நெடுவழக்கு நடக்கின்றது. பாட்டைக் கேட்ட நிலையில், அவன் எண்ணுகின்றான்: "இராமனே உத்தமன் தான் வேறு, தம்பி வேறு என்ற எண்ணம் அற்றவன்; எவ்வளவு பெருந் தன்மையோடு பரதன் பெற்ற செல்வம் நான் பெற்ற செல்வமன்றோ என்று பேசுகின்றான். நான் மட்டும் என் தம்பியின்மீது ஏன் வழக்கை நடத்த வேண்டும்? அந்தச் சொத்தை என் தம்பி ஆண்டால் என்ன, நான் ஆண்டால் என்ன?" என்று எண்ணிக் கொண்டு வீட்டிற்கு வருகின்றான்; பசி தீர உண்கின்றான். உறங்குகின்றான் உறக்கத்திலே வைராக்கியம் உலைந்து விடுகிறது. மறுநாட் காலையில் அவன் வக்கீல் வீட்டுக்குப் போகிறான். வழக்கு முறையாக நடக்கிறது. இதுதான் புராண வைராக்கியம். மற்றொரு வைராக்கியத்தைப் பார்ப்போம். ஒருவன் திடீர் என்று இறந்துவிடுகின்றான். உற்றார் உறவினர் எல்லோரும் வருகின்றார்கள், கண்ணிர் சொரிகின் றார்கள். இறந்த உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்கின்றார்கள். ஈமத்தில் ஏற்றுகின்றார்கள். நெருப்பை மூட்டுகின்றார்கள். அப்பொழுது ஒருவன் நினைக்கிறான். 'என்ன உலக வாழ்க்கை ! நேற்று இருந்தான், இன்று போய்விட்டான். எனக்கும் இப்படித் தானே ஆகும் ஆதலால், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும், "க்னியேனும் வறியசெங் காயேனும் உதிர்சருகு கந்தமூ லங்களேனும் கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப்பு சித்துநான் கண்மூடி மெளனியாகித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/36&oldid=878484" இலிருந்து மீள்விக்கப்பட்டது