பக்கம்:தமிழ் விருந்து.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கையும் வைராக்கியமும் 35 தனியே.இ ருப்புதற் கெண்ணினேன் எண்ணமிது சாமிநீ அறியாததோ சர்வபரி பூரண கண்டதத் துவமான் சச்சிதா னந்த சிவமே” என்று அவன் பாடுகின்றான். மயானத்திலிருந்து திரும்பி வருகின்றான். மனத்தில் எழுந்த வைராக்கியம் மாயமாய்ப் பறந்து போகின்றது. இதுதான் மயான வைராக்கியம். மனத்திண்மையே வைராக்கியமாகும்; மனத்திண்மை யற்றவர்கள் ஒரு கொள்கையில் நிலைத்து நிற்க மாட்டார்கள். மன உறுதியுடையவர்கள் மலைபோல் உலையாது நிற்பார்கள். அவர், மெய் வருத்தம் பாரார்; பசி நோக்கார்; அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார். மனவுறுதி கொண்டு அறநெறியில் நிற்கும் மாந்தரை இவ்வுலகம் போற்றும். "அரிச்சந்திரன், வாய்மை என்னும் சத்திய நெறியில் வழுவாது நின்றான்; பலவகையான சோதனைக்கு உட்பட்டான்; பதியிழந்தான். பாலனை இழந்தான் படைத்த நிதி இழந்தான் இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக எல்லா வற்றையும் இழந்து, சனத்தொழில் புரியும் காலத்தும் சத்தியத்தை விடாது பற்றி நின்றான்; தன்னைச் சோதித்த முனிவரை நோக்கி, "பதியி ழந்தனம், பாலனை யிழந்தனம், படைத்த நிதியி ழந்தனம், இனிநமக் குளதென நினைக்கும் கதியி ழக்கினும் கட்டுரை இழக்கிலேன்' என்றான். அது கேட்ட முனிவன், "மதியிழந்து, வாயிழந்து, மானமும் இழந்து சென்றான்" என்று அரிச்சந்திரன் சரித்திரம் கூறுகிறது.