பக்கம்:தமிழ் விருந்து.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தமிழ் விருந்து இனி, மத வைராக்கியம் என்பது ஒன்றுண்டு. இவ் வுலகப் பொருள்களில் ஆசையற்று, கடவுளையே நினைந்து கசிந்து நிற்கும் நிலையே அது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் இவ் வைராக்கியத்தின் தன்மையை விளக்கியருளினார். "கொள்ளேன் புரந்தரன் மால்அயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினதடி யாரொடல் லால்நர கம்புகினும் எள்ளேன் திருவரு ளாலேஇ ருக்கப்பெறின் இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லால்னங்கள் உத்தமனே" என்பது ஒர் அருமைத் திருவாசகம். இத் தகைய வைராக்கியத்தைத் தம் வாழ்க்கையிலே காட்டிய பக்தர் பலராவர். 'யூனிவில்லிபுத்துாரில் கோதை என்னும் ஆண்டாள் தோன்றினாள். இளமையிலேயே அவள் பெருமாளிடம் பேரன்பு செலுத்தினாள்; அவர் திருமேனியைக் கண்டு காதலித்தாள்; அவர் திருநாமங் களைக் கேட்டுச் செவிகுளிர்ந்தாள்; அவர் திருப் புகழைப் பாடிப் பாடிப் பரவசமுற்றாள். அவள் மங்கைப் பருவமுற்ற போது பெற்றோர் மனம் பேசத் தொடங்கினார்கள். அதை யறிந்த மங்கை, மனிதன் எவனையும் நான் மணக்க மாட்டேன்; மணிவண்ண னாகிய பெருமாளையே மணப்பேன் என்றாள். இந்த மனத் திண்மையைக் கண்டு யாவரும் வியப்பும் திகைப்பும் உற்றார்கள். ஆயினும் அவளன்பின் திறத்தினை அறிந்த திருவரங்கப் பெருமாள் அவளை ஏற்றுப் பேரருள் இன்பமளித்தார்" என்று குருபரம்பரை என்னும் வரலாறு கூறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/42&oldid=878497" இலிருந்து மீள்விக்கப்பட்டது