பக்கம்:தமிழ் விருந்து.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரம் - 51 என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுமாற்றால் இளங்கோவின் மனத்தில் அமைந்த கொள்கை இனிது விளங்குகின்றது. கண்ணகியின் சிலம்பு காரணமாகவே கதை விளைந்ததாதலின் சிலப்பதிகாரம் என்று இளங்கோவடிகள் அக் காவியத்திற்குப் பெயரிட்டார். இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் தமிழ்த்தாயின் கழுத்தில் இலங்கும் மணியாரமாகும் என்று கற்றறிந்தோர் கூறுவர். அக் காவியம் கற்போர் மனத்தை அள்ளும் திறம் வாய்ந்ததென்று கட்டுரைத்தார் பாரதியார். "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ் நாடு" என்பது புனைந்துரையன்று பொருளுரையே. இத் தகைய காவியத்திலமைந்த நயங்களிற் சிலவற்றைக் காண்போம் : கண்ணகியை மணந்து இன்புற்ற கோவலன், நலமெல்லாம் ஒருங்கே வாய்ந்த அந் நங்கையை நோக்கி, "மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடைப் பிறவா மணியே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை" என்று கூறும் கட்டுரையி லமைந்த காதற்சுவை நம் உள்ளத்தைக் கவர்கின்றதன்றோ? தமிழ் வளர்த்த பாண்டியனுக்குரிய வைகை ஆற்றை, "புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையை என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/53&oldid=878520" இலிருந்து மீள்விக்கப்பட்டது