பக்கம்:தமிழ் விருந்து.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தமிழ் விருந்து பொய்யாக் குலக்கொடி" என்று இளங்கோவடிகள் போற்றும்பொழுது நம் செவியில் இன்பத் தேன் வந்து பாய்கின்றதன்றோ? இன்னும் சோழநாட்டை வளநாடாக்கிய காவேரியாற்றை, "பூவார் சோலை மயிலால புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி" என்று அவர் வாழ்த்தும்பொழுது நம்முள்ளம் குளிர்கின்றதன்றோ? இனி, மதுரையம்பதியிலே கணவனைப் பறிகொடுத்த கண்ணகி, தலைவிரி கோலமாக நின்றுகொண்டு, "மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் பட்டாங்கில் யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையையும்" என்று வஞ்சினம் கூறும்பொழுது நம் நெஞ்சத்தில் வீரம் பொங்குகின்றதன்றோ? சுருங்கச் சொல்லின், காவியத்தில் அமைதற்குரிய சுவைகள் எல்லாம் சிலப்பதிகாரத்தில் செவ்வையாக அமைந்திருக்கின்றன. ஆதலால், சிலம்பின் செல்வம் தமிழ் நாட்டுச் செல்வங்களுள் சிறந்த செல்வமாகும். கண்ணகி, மூன்று தமிழ் நாட்டுக்கும் உரிய பொருளாக விளங்குகின்றாள்: சோழ நாட்டிலே பிறந்து பாண்டி நாட்டிலே கற்பின் பெருமையை நிறுவி, சேர நாட்டிலே தெய்விகமுற்ற கண்ணகியின் பெருமை தென்னாட்டிலுள்ள் முந்நாடு களுக்கும் உரியதன்றோ? இதனாலேயே மதுரைச் சாத்தனார் இளங்கோவடிகளை நோக்கி, "முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/54&oldid=878522" இலிருந்து மீள்விக்கப்பட்டது