பக்கம்:தமிழ் விருந்து.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎酶 தமிழ் விருந்து இத் தெய்வமல்லது பொற்புடைத்தெய்வம் யாம் கண்டிலம்" என்ற வாக்கு மெய்யாயிற்று. வீரக்கற்பு வாய்ந்த கண்ணகியின் கதையால் ஒர் அரசியல் உண்மையும் விளங்குகின்றது. நெறி தவறிய அரசனை அறமே ஒறுக்கும் என்னும் உண்மையைப் பாண்டியன் வரலாறு காட்டுகின்றது. அரண்மனைச் சிலம்பைக் களவாடிய கள்வன் அகப்பட்டான் என்று பொற்கொல்லன் சொல்லிய சொல்லை ஆராய்ந்து பாராது, உண்மையை விசாரித்து அறியாது, 'அக் கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவருக என்று பனித்தான் பாண்டியன். அரசன் ஆணையால் தன் கணவன் இறந்தான் என்றறிந்த கண்ணகி சீறி எழுந்தாள், 'தீவேந்தன் தனைக்கண்டு இத் திறம் கேட்பேன்' என்று புறப்பட்டாள்; கருங்கூந்தல் விரிந்து கிடக்க, கண்கள் கண்ணிர் வடிக்க, கையில் ஒற்றைத் சிலம்பேந்திக் காவலன் முன்னே தோன்றினாள்; கோவலனிடமிருந்த சிலம்பு அரண்மனைச் சிலம்பன்று, தன் சிலம்பே எனப் பாண்டியன் திடுக்கிடப் பேசினாள்; அச் சிலம்பை உடைத்துத் தன் வழக்கை மெய்ப்பித்தாள். அந் நிலையில் மன்னவன் கை சோர்ந்து, மெய் சோர்ந்தான்; "தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன் பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன் மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது, கெடுகளின் ஆயுள்" என மயங்கி விழுந்து மாண்டான். இங்ங்னம் கண்ணகிக்குச் செய்த தவறு காரணமாக உயிர் துறந்த மன்னவனை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/56&oldid=878526" இலிருந்து மீள்விக்கப்பட்டது