பக்கம்:தமிழ் விருந்து.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தமிழ் விருந்து துணையாகக் கவுந்தியடிகள் என்ற முனிவர் வந்து சேர்ந்தார். காடும் நாடும் கடந்து மதுரையின் அருகே வந்தபோது, கோவலன் மனம் கரைந்து முனிவரை நோக்கி, 'மாதவப் பெரியீர் பாவியேன் சிறுநெறியிற் சேர்ந்து சிறுமையுற்றேன்; காதல் மனையாளாகிய கண்ணகிக்கும் கடுந்துயர் விளைவித்தேன்' என்று தன் ஆற்றாமையை வெளியிட்டான். அப்பொழுது முனிவர், இராமன் கதையையும் நளன் கதையையும் எடுத்துரைத்து, 'அப்பா வினையின் பயனை எவ்வாற்றானும் விலக்க வொண்ணாது அது வந்தே தீரும்' என்று அவன் உள்ளத்தைத் தேற்றினார். இத் தகைய பழமை வாய்ந்த நளன் கதையைத் தமிழிலே பாடிப் புகழ் பெற்றார் புகழேந்திப் புலவர். அவர் இயற்றிய 'நளவெண்பா' என்னும் நூல் சிந்தைக்கினிது செவிக்கினிது. அவ் வெண்பாக்களிற் சிலவற்றைப் பார்ப்போம் : விதர்ப்ப நாட்டரசனாகிய வீமன் மகள் தமயந்தி என்பாள், கட்டழகு வாய்ந்த கன்னியாய்த் திகழ்ந்தாள். அவள் நலங்களை ஒர் அன்னத்தின் வாயிலாக அறிந்தான் நளன் என்னும் மன்னன். பள்ளத்திற் பாயும் வெள்ளம்போல் அவனுள்ளத்தில் காதல் விரைந்து நிறைந்தது. கங்கு கரையின்றிப் பொங்கிய காதலால் ஆண்மைக் குணங்களாய மானமும் நாணமும் இழந்த நளன் அன்னத்தை நயந்து நோக்கி, 'உன் நாவிலே உள்ளது என் நல்வாழ்வு' என்றுரைத்தான். இக் கருத்தைக் கவி அழகாகப் பாடுகின்றார். "இற்றது நெஞ்சம், எழுந்தது இருங்காதல் அற்றது மானம் அழிந்ததுநாண் - மற்றினிஉன் வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/64&oldid=878546" இலிருந்து மீள்விக்கப்பட்டது