பக்கம்:தமிழ் விருந்து.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நளவெண்பா 岱5 தமயந்தியின் நிலை இவ்வாறாக, கானகத்தில் தனியனாய்ப் பொறி கலங்கி, நெறி மயங்கி, நடந்து சென்ற நளனை ஒரு கரும்பாம்பு கடித்தது. நஞ்சு, உடல் முழுவதும் பரவி, அவன் உருவத்தை மாற்றியது. கண்டோர் கண்ணையும் கருத்தையும் கவரும் திருமேனி கருகிக் குறுகிற்று. காட்டைக் கடந்து காலைப் பொழுதில் நளன் கடற்கரை வழியாகச் சென்றான்; அங்கு மலர்ந்திருந்த நீலப் பூக்களையும், பரந்துலாவிய மெல்லிய தென்றலையும், இரை தேடித் திரிந்த பறவைகளையும் பார்த்துப் பலவாறு புலம்பலுற்றான். "பாண்லே சோலைப் பசுந்தென்றல் வந்துலவும் காணலே வேலைக் கழிக்குருகே-யானுடைய மின்னிமைக்கும் பூனாள்.அவ் வீங்கிருள்வாய் ஆங்குணர்ந்தால் என்நினைக்கும் சொல்வீர் எனக்கு" என்று காதலிக்குச் செய்த தீங்கை நினைந்து கரைந்தழுதான். இவ்வாறு கடற்கரையில் நடந்து செல்லும் பொழுது நளனைக் கண்டு நண்டுகள் ஒடி, வளைகளின் உள்ளே ஒளிந்தன; அவற்றைக் கண்ட மன்னன் மனத்தில் துன்பம் பொங்கி எழுந்தது. காதல் மனையாளைக் காட்டிலே கைவிட்ட பாதகனைப் பார்க்கவும் கூடாதென்று நண்டுகள் ஒடி மறைந்தன என்று எண்ணி நளன் மனம் நைந்தான். "காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட பாதகனைப் பார்க்கப் படாதென்றோ-நாதம் அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஓடி ஒளிக்கின்ற தென்னோ உரை"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/67&oldid=878551" இலிருந்து மீள்விக்கப்பட்டது