பக்கம்:தமிழ் விருந்து.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நளவெண்பா 67 கண்களில் கண்ணிர் பொங்கிற்று. இரு மக்களையும் கட்டி அணைத்துக்கொண்டு, 'என் மக்கள் போல்கின்றீர், யார் மக்கள் நீர்?' என்று நாத்தழும்ப அவன் வினவினான். அதற்கு மழலை மொழிகளால் அவர்கள் மறுமொழி தந்தார்கள். "மன்னன் நிடதத்தார் வாள்வேந்தன் மக்கள்.யாம் அன்னைதனைக் கான்விட்டு அவன்ஏக-இந்நகர்க்கே வாழ்கின்றோம் எங்கள் வளநாடு மற்றொருவன் ஆள்கின்றான் என்றார் அழுது" அவ் வாசகத்தைக் கேட்ட நளன் கண்ணிர் சொரிந்து பெருமூச்செறிந்தான். குழந்தைகளைத் தமயந்தி மாளிகைக்கு அழைத்து நிகழ்ந்ததைக் கேட்டாள்; ஐயம் தீர்ந்தாள். தேர்ப்பாகனாக வந்த நளனை விதர்ப்ப மன்னன் தன் மாளிகையினுள்ளே அழைத்து வந்தான். அந் நிலையில் முன்னைய வடிவத்தைப் பெற்ற நளன் க்ானகத்திற் கைவிட்ட காதலியைக் கண்டான்; ஆனந்த வாரியில் மூழ்கினான். பிரிந்தவர் கூடினாற் பேசல் வேண்டுமோ? சூதினால் இழந்த நாட்டை நளன் மீண்டும் பெற்று மனைவி மக்களோடு வாழ்வா னாயினான். - இக் கதையைக் கொண்ட 'நளவெண்பா நானூற்று இருபத்து நான்கு வெண்பாக்களை உடையது. வெண்பாப் பாடுவதில் புகழேந்தி இணையற்றவர் என்பது கவிச்சுவை தேரும் அறிஞர் கருத்து "வெண் பாவிற் புகழேந்தி, விருத்தம் என்னும் ஒண்பாவில் உயர் கம்பன்' என்ற மதிப்புரையை மறுப்பார் எவருமிலர். கம்பர் கருத்தும் புகழேந்திப் புலவர் கருத்தும் சில விடங்களில் ஒத்திருக்கக் காணலாம். ஒரு கருத்தைப் பார்ப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/69&oldid=878555" இலிருந்து மீள்விக்கப்பட்டது