பக்கம்:தமிழ் விருந்து.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தமிழ் விருந்து அவள் மூக்கில் அணிந்திருந்த மூக்குத்தி அவனுக்கு மிக்க புதுமையாயிருந்தது. அது புன்னைப் பூவின் அரும்புபோல் தோன்றிற்று. "வன்னக் குமிழிலே புன்னை யரும்பேது சிங்கி?" என்று கேட்டான் சிங்கன். முத்துப் பதித்த மூக்குத் தியைக் கண்டறியாத சிங்கனை முகமலர்ந்து நோக்கி, "முந்நீர்ச் சலாபத்து முத்துமூக் குத்திகாண் சிங்கா " என்றாள் சிங்கி மெல்லிய பட்டைச் சுற்றிச் சுற்றிக் கட்டியிருந்தாள் அக் குறவஞ்சி. அதைக் கண்ட சிங்கன், "இல்லாத சுற்றெல்லாம் எங்கே படித்தாய்நீ சிங்கி?" என்று வியந்தான். அது கேட்ட காதலி, "நாட்டில் நல்லாரைக் காண்பவர்க்கு எல்லாம் வருமடா சிங்கா" என்று நல்ல பாடம் கற்பித்தாள். இப்படியே குழந்தைகள் போடும் விளையாட்டுச். சண்டைகளும் விநோதமாய் இருக்கும். பெரிய இடத்துப் பிள்ளைகளாகிய விநாயகனும் முருகனும் ஒரு நாள் சண்டை போட்டுக் கொண்டார்கள். கண்ணைக் கசக்கி அழுது சிணுங்கிக்கொண்டு விநாயகன் அப்பாவிடம் சென்றான் : பார் அப்பா ! தம்பி என் காதைப் பிடித்துக் கிள்ளிவிட்டான்' என்று தன் பெரிய காதைத் தொட்டுக் காட்டினான். "முருகா, நீ ஏன் அப்படி அண்ணன் காதைக் கிள்ளினாய்? என்று கேட்டார் தந்தை அண்ணன் மட்டும் என் கண்ணை ஆறு, ஏழு என்று எண்ணலாமோ? என்று பன்னிரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/74&oldid=878567" இலிருந்து மீள்விக்கப்பட்டது