பக்கம்:தமிழ் விருந்து.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தமிழ் விருந்து இனி, காதல் மணம் புரிந்துகொண்ட ஒரு கற்புடையாள் பேச்சைப் பார்ப்போம் : மதுரையில் திருமலை நாயக்கர் அழகான மாளிகை கட்டி, அதன் சுவர்களில் பேர்போன வித்தகரைக் கொண்டு சித்திரம் எழுதுவித்தார். அதைக் காண ஆசைப்பட்ட கணவன் ஒருவன், சித்திர மாளிகைக்கு வருகிறாயா? என்று தன் காதலியை அழைத்தான். அங்கே என்ன விசித்திரமான சித்திரம் எழுதுகிறான்? என்று வினவினாள் மனைவி, அழகு வாய்ந்த ஆண் பெண் இவர்களின் வடிவங்களை எழுதுகிறானாம். கண்ணையும் மனத்தையும் கவுர்கின்றனவாம் அவ் வுருவங்கள் என்றான் கணவன். 'அப்படியானால் நான் வரமாட்டேன்; நீங்களும் போகலாகாது' என்று மங்கை அழுத்தமாகப் பேசினாள். 'ஏன் அப்படிச் சொல்கிறாய்? என்று வியப்புடன் வினவினான் காதலன். அங்கு வரைந்துள்ள சித்திரம் ஆண் உருவமாய் இருந்தால் நான் பார்க்க மாட்டேன்; பெண் உருவமாய் இருந்தால் நீங்கள் பார்க்க நான் சகிக்கமாட்டேன்' என்ற பதில் வந்தது. இக்கருத்தமைத்து வேதநாயகம் பாடியுள்ளார் : "ஓவியர்நீள் சுவர் எழுதும் ஒவியத்தைக் கண்ணுறுவான் தேவியையான் அழைத்திடஆண் சித்திரமேல் . நான்பாரேன் பாவையர்தம் உருவெனில் பார்க்கமனம் பொறேன் எனறாள காவிவிழி மங்கைஇவள் கற்புவெற்பின் வற்புளதால்" என்றார் கவிஞர். இனிப் புலவர்கள் பேசும் முறையில் அமைந்த சுவையைப் பார்ப்போம். இரண்டு புலவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் இருந்தார்கள். ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/76&oldid=878571" இலிருந்து மீள்விக்கப்பட்டது