பக்கம்:தமிழ் விருந்து.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகைச்சுவை 75 முடவர்; மற்றவர் குருடர். குருடர் தோளில் முடவர் ஏறிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று இருவரும் கவி பாடிப் பிழைத்தார்கள். ஒரு நாள் இவர்கள் சொக்கலிங்கர் கோயில் பொற்றாமரைக் குளத்தில் நீராடப் போனார்கள். குருடர் குளத்தில் இறங்கிப் படியிலே ஆடையைத் துவைத்துக் கொண்டிருந்தார். முடவர் கரையிலிருந்தார். ஒர் ஆடையைத் துவைத்து ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து, மறு ஆடையைத் தப்பிக் கொண்டிருந்தார் குருடர், ஒதுக்கி வைத்த ஆடை தண்ணிரில் நழுவி விழுந்தது; மெல்ல மிதந்து போய்க் கொண்டிருந்தது. கரையிலிருந்த முடவர் பார்த்தார்; சிரித்தார். ஆடை தப்பிப்போவது சரிதான் என்று அவருக்குத் தோன்றிற்று. இதுவரை நாம் அதைத் தப்பினோம். இப்போது அது நம்மைத் தப்புகிறது: "அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம் அதனைத் தப்பினால் நம்மை அது தப்பாதோ" என்றார் முடவர். அதுகேட்ட குருடர், ஆடை தண்ணிரில் விழுந்துவிட்ட தென்று அறிந்தார். ஆனால், எப்படிக் கண்டு எடுப்பார்? போனால் போகட்டும்; பழைய ஆடை போனால் புதிய ஆடை தருவார் பரமசிவம். இக் கலிங்கம் போனால் சொக்கலிங்கம் தருவார்' ೯೯rpr நம்பிப் பதில் உரைத்தார் குருடர், - இப்புவியில் இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்கம் மாமதுரைச் சொக்கலிங்க முண்டே துணை' என்றார். இனி, கட்டுக்கடங்காத காதல் வயப்பட்டோரும் பிறர் நகைக்கப் பேசுவர்; இராவணன் தங்கையாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/77&oldid=878573" இலிருந்து மீள்விக்கப்பட்டது