பக்கம்:தமிழ் விருந்து.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IHH 11. தமிழ் நாட்டாரும் அயல் நாட்டாரும் பாரத நாட்டின் தென்பாலுள்ளது தமிழ்நாடு. இந் நாட்டிற்கு வடக்கே ஆந்திர தேசம் என்னும் தெலுங்கு நாடு அமைந்திருக்கின்றது. மேற்கே கேரள தேசம் என்னும் மலையாள நாடு காணப்படுகின்றது. தெற்கே சிறு கடலாற் பிரிக்கப்பட்ட சிங்கள தேசம் என்னும் இலங்கை இருக்கின்றது. இத் தேசங்களில் வாழ்வோர் நமக்கு அயலார் ஆவர். இவற்றுள் ஆந்திர தேசத்தி லுள்ள தெலுங்கரை நம் முன்னோர் வடுகர் என்றார்கள். 'வடுகன் தமிழறியான், வைக்கோலைக் கசு என்பான்' என்ற வாசகம் தமிழ்நாட்டில் உண்டு. வடுகன் என்ற சொல்லுக்கு வடக்கேயுள்ளவன் என்பது பொருள். முற்காலத்தில் வடுகராகிய தெலுங்கர், எந்த எல்லைக்கு வடக்கே இருந்தார்கள் என்பதைப் பார்ப்போம் : திருப்பதி என்னும் திருவேங்கட மலைக்கு வடக்கே தெலுங்கர் வாழ்ந்தார்கள் என்று தமிழ் இலக்கியம் கூறுகின்றது. அக்காலத்தில் தமிழ் நாட்டின் வடக்கு எல்லை திருவேங்கடமலை. அம் மலையே ஆந்திர நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே எல்லை காட்டும் கல்லாய் நின்றது. இதனாலேயே தமிழ் நாட்டார் திருவேங்கட மலையை வடமலை என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/79&oldid=878575" இலிருந்து மீள்விக்கப்பட்டது